ஆணவக் கொலையால் காதல் கணவனை இழந்த கேரள பெண்.. இப்போது எப்படியிருக்கிறார் தெரியுமா?

Report Print Fathima Fathima in உறவுமுறை

கேரளாவில் ஆணவக் கொலையால் தான் கணவனை இழந்த பெண், தற்போது கணவரின் குடும்பத்தாரின் அன்பால் திகைத்துப் போயிருப்பதாக கூறியிருக்கிறார்.

கேரளாவை சேர்ந்தவர் கெவின் ஜோசப், இவர் நீனு என்ற பெண்ணை காதலித்து கடந்த மே மாதம் கரம்பிடித்தார்.

இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கை தொடங்கிய நிலையில், பட்டியல் இனத்தை சேர்ந்தவர் கெவின் என்பதால் நீனுவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் கெவினை பழிவாங்க எண்ணி கடத்தி சென்று படுகொலை செய்தனர், இதுதொடர்பான வழக்கில் நீனுவின் சகோதரர் சானு சாக்கோவை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர்.

கேரளாவையே உலுக்கிய இந்த வழக்கில், காதல் கணவனை இழந்து பரிதவித்த நீனு, கெவினின் வீட்டிலேயே தங்கியுள்ளார்.

அவர்களுக்கு கஷ்டம் அளிக்கக் கூடாது என்பதற்காக பள்ளிக் குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்து தன்னுடைய செலவை தானே பார்த்துக் கொள்கிறாராம்.

இவ்வளவு சோகத்திலும் கல்லூரிக்கு சென்று படித்து ஸ்காலர்ஷிப் வாங்கியுள்ளார், தினமும் தனது கணவரின் கல்லறைக்கு சென்று மலர்கள் வைக்கவும் மறப்பதில்லை.

அவர் கூறுகையில், கெவினின் கல்லறைக்கு வருவதால் தனக்கு நிம்மதி கிடைப்பதாகவும், இதை விட தனக்கு இந்த உலகில் வேறெதும் பெரிதாக தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய இந்த நிலை வேறேந்த பெண்ணுக்கு வரக்கூடாது என தினமும் பிரார்த்தனை செய்துவரும் நீனு, கெவின் பெற்றோரின் அன்பால் திகைத்துப் போவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...