ஏற்கனவே திருமணமான பெண்களை மணந்த நடிகர்கள் யார் தெரியுமா?

Report Print Kabilan in உறவுமுறை

இந்திய நடிகர்களில் ஏற்கனவே திருமணமான பெண்களை மணந்தவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.

எம்.ஜி.ஆர்

நடிகை ஜானகி, நடிகரும் ஒப்பனையாளருமான கணபதி பட் என்கிற கன்னட கலைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர், ராஜ முக்தி என்ற படத்தில் நடித்தபோது படத்தின் நாயகி ஜானகி, தனது முதல் மனைவியைப் போலவே இருந்ததால், அவர் மீது கொண்ட ஈர்ப்பினால் எம்.ஜி.ஆர் அவரை காதலித்துள்ளார்.

ஜானகியும் அவரை காதலித்தார். இந்த விடயம் ஜானகியின் கணவருக்கு தெரியவே, தனது கணவரை பிரிந்த ஜானகி, 1962ஆம் ஆண்டு சட்டப்படி எம்.ஜி.ஆர்-ஐ திருமணம் செய்துகொண்டார்.

சரத்குமார்

நடிகர் சரத்குமார், கடந்த 1984ஆம் ஆண்டு சாயா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர், நடிகை நக்மாவுடன் அவர் உறவில் இருப்பதாக கூறி சாயா அவரை விவாகரத்து செய்தார். அதனைத் தொடர்ந்து, சரத்குமார்-நக்மாவிற்கு இடையிலான உறவு பிரிந்ததாக கூறப்படுகிறது.

அதன் பின்னர், சாயா 2000ஆம் ஆண்டு சரத்குமாரை விவாகரத்து செய்தார். பின்னர், 2001ஆம் ஆண்டில் நடிகை ராதிகாவை, சரத்குமார் திருமணம் செய்துகொண்டார்.

ஆனால், அப்போது ராதிகா ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்திருந்தார்.

பிரஷாந்த்

விஜய், அஜித்துக்கு போட்டியாக வலம் வந்தவர் நடிகர் பிரஷாந்த். இவர் கிரகலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்தார். ஆனால், திருமணமான சில மாதங்களிலேயே கிரகலட்சுமி ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து, பிரஷாந்த் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் தொடர்ந்த இந்த வழக்கில், பிரஷாந்திற்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது.

லியாண்டர் பயஸ்

இந்திய டென்னிஸ் நட்சத்திர வீரர் லியாண்டர் பயஸ், ‘ராஜதானி எக்ஸ்பிரஸ்’ என்ற படத்தின் மூலமாக நடிகராகவும் அறிமுகமானார். அதன் பின்னர், நடிகர் சஞ்சய் தத்தின் முன்னாள் மனைவியான ரியா பிள்ளை என்பவருடன் லிவ்-இன் உறவில் இருந்தார்.

சஞ்சய் தத்

நடிகர் சஞ்சய் தத்தின் மனைவி மான்யதா. இவர் ஏற்கனவே திருமணமானவர் ஆவார். சஞ்சய்-மான்யதாவின் திருமணம் நீதிமன்றத்தில் செல்லாது என்று அவரது கணவர் மிராஜ் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால், வழக்கை விசாரித்த நீதிமன்றம் இவர்களது திருமணம் செல்லும் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

மிதுன் சக்கரவர்த்தி

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, டிஸ்கோ நடனக் கலைஞரான யோகீதா பாலி என்பவரை திருமணம் செய்தார். ஆனால், யோகீதா ஏற்கனவே கிஷோர் குமார் என்பவரை திருமணம் செய்திருந்தார். அதன் பின்னர், 1978ஆம் ஆண்டில் கிஷோர்-யோகீதா ஜோடி விவாகரத்து பெற்றனர்.

அதனைத் தொடர்ந்தே மிதுன் சக்கரவர்த்தியும், யோகீதாவும் 1979ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

அனுபம் கெர்

பிரபல ஹிந்தி நடிகரான அனுபம் கெர், தன்னுடன் நாடங்களில் நடித்த கிரோன் கெர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். கிரோன் ஏற்கனவே தொழிலதிபரான கௌதம் பெரி என்பவரை திருமணம் செய்திருந்தார். அதன் பின்னர், கடந்த 1985ஆம் ஆண்டு அவரை பிரிந்தார்.

சமீர் சோனி

நடிகர் சமீர் சோனி, இந்திய மொடல் அழகியான ராஜலட்சுமியை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் 6 மாதங்கள் கூட நீடிக்கவில்லை என்பதால், நடிகை நீலம் கோதாரியை சமீர் திருமணம் செய்துகொண்டார்.

இவர்களது திருமணத்திற்கு முன்பே நீலம் தொழிலபதிபரான ரிஷி என்பவரை திருமணம் செய்திருந்தார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்