இறக்கும் தருவாயில் சொன்ன வார்த்தை இது: இன்னும் அவரை காதலிக்கிறேன்! உலக பிரபலத்தின் நெகிழ்ச்சி காதல்

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

அமெரிக்க மக்களின் மனதில் நீங்க இடம் பிடித்தவரும், அமெரிக்க வரலாற்றிலேயே நீண்ட காலம் வாழ்ந்த அதிபர் ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் ஆவார்.

இவர் நேற்று தனது 94 வயதில் உயிரிழந்தார்.

அமெரிக்காவின் 41 வது குடியரசுத் தலைவராக 1988-ம் ஆண்டு ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் பதவியேற்றார். 1993-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தார்.

ஆட்சிக்காலம் முடிவடைந்து 1993-ம் ஆண்டு வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார்.

ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் அரசியலில் இருந்து விலகினாலும் தனக்குப் பிடித்த விமான சாகசங்களை செய்து அமெரிக்க மக்கள் நினைவுகளில் இருந்து நீங்காமல் இருந்தார்.

பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட புஷ், பின்னர் தனது முதுமை காலத்தை தனது காதல் மனைவியுடன் கழித்து வந்தார்.

ஏறக்குறைய 80 ஆண்டுகளாக அனைத்துச் சூழல்களிலும் புஷ்ஷுக்கு ஆதரவாக இருந்தவர் பார்பரா. கரங்களை பற்றிக் கொண்டு ஒருவருக்கொருவர் அன்போடு நடைபோட்டனர்.

புஷ்ஷுக்கு ஏற்பட்ட நெருக்கடியான சூழல்களில் பார்பராவின் காதல் மட்டுமே அவரை மீண்டுவரச் செய்தது.

இறப்பதற்குச் சில ஆண்டுகள் முன்னர் தன் கணவர் குறித்து பார்பரா எழுதிய வரிகள் இவை,
நான் என் முதுமையை நோக்கி நடைபோடுகிறேன், 72 ஆண்டுகளுக்கு முன்னர் கரம்பிடித்த என் கணவரை இன்னும் அதிகமாகக் காதலித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு உலகத்தைக் கொடுத்தவர் புஷ். அவர் சிறந்த மனிதர்.
அதுமட்டுமல்ல இறக்கும் தருவாயிலும் அவர் சொன்னது என்ன தெரியுமா, `என் கணவரை நான் இன்னும் அதிகமாகக் காதலிக்கிறேன்’ என்பதுதான்.

ஏப்ரல் மாதம் புஷ்ஷின் மனைவி பார்பரா பியர்ஸ் புஷ் 92-வது வயதில் காலமானார்.

பார்பராவின் இறுதிச்சடங்கில் வீல் சேரில் கையில் மலர்க்கொத்துடன் இருந்த புஷ்ஷை பார்த்து அமெரிக்க மக்கள் கலங்கினர்.

தன் மனைவியின் சடலத்தை கண் இமைக்காமல் புஷ் பார்த்துக்கொண்டிருந்ததும் பின்னர் வெடித்து அழுததும், தன் மனைவி மீது அவர் வைத்திருந்த ஆழமான காதலை வெளிப்படுத்தியது. மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் போனதால்தான் என்னவோ சில மாதங்களில் புஷ்ஷும் மரணத்தைத் தழுவினார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்