தீபிகா படுகோன்-ரன்வீர் சிங் இரண்டாவது முறையாக திருமணம்! புகைப்படங்கள் வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சி

Report Print Kabilan in உறவுமுறை

இத்தாலியில் நட்சத்திர ஜோடியான தீபிகா படுகோன்-ரன்வீர் சிங் இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில், நேற்று சிந்தி முறைப்படி திருமணம் செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

ஹிந்தி திரையுலகின் காதல் ஜோடியான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் இருவரும், நேற்று முன்தினம் இத்தாலியில் திருமணம் செய்துகொண்டனர்.

ஆனால், அங்கு புகைப்படங்கள் எடுக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் புகைப்படங்கள் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அதன் பின்னர், நேற்றைய தினம் இந்த ஜோடி வட இந்திய கலாச்சார சிந்தி முறைப்படி இரண்டாவது முறையாக திருமணம் செய்துகொண்டது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரன்வீர் சிங் மற்றும் தீபிகா இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் பிரபல ஹிந்தி பட இயக்குநர் கரண் ஜோஹர், அனுஷ்கா ஷர்மா, பிரியங்கா சோப்ரா, ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்த திருமணத்தில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என வெகு சிலரே கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்