16 வயது குறைவான நபருடன் திருமணமா? பிரபல நடிகை சொன்ன பதில்

Report Print Kabilan in உறவுமுறை

தன்னை விட 16 வயது குறைவான இளைஞரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வெளியான செய்திகளுக்கு, ஹிந்தி நடிகை சுஷ்மிதா சென் ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

பிரபல ஹிந்தி நடிகை சுஷ்மிதா சென், தமிழில் நாகார்ஜுனாவுடன் ‘ரட்சகன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தியாவின் முதல் பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற இவர், 42 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

ஆனால் ரெனீ, அலிசா என்ற இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ரோமன் ஷால்(27) எனும் மொடலை சுஷ்மிதா காதலித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை, சுஷ்மிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தனது காதலை உறுதிபடுத்தியிருந்தார்.

இவர்கள் இருவரும் அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொள்ள இருப்பதாக மும்பை பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தான் இப்போதைக்கு திருமணம் செய்யவில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் சுஷ்மிதா சென் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

‘இந்த உலகம் என்னுடைய திருமண செய்தியை எதிர்பார்க்கிறது. ஆனால் எனக்கு விளையாட்டு மிகவும் பிடிக்கும். என்னைப் பற்றிய வதந்திகள் இறந்து போகும்.

ஏனென்றால், இப்போதைக்கு நான் திருமணம் செய்யவில்லை. இப்போது நான் ரோமனுடன் ரொமான்ஸில் மட்டுமே இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்