தோழியுடன் தவறான தொடர்பு... மனைவி செய்தது? மனம் பகிர்ந்த நபர்

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

திருமண வாழ்க்கையில் தங்களுக்கென்று இருக்கும் ஒருவித எதிர்பார்ப்புகள் பூர்த்தியாக சமயத்தில்தான் தடம்புரண்டு வேறு ஒரு உறவை தேடிச்செல்கிறார்கள்.

அப்படி தனது திருமண வாழ்க்கையில் தனது மனைவியை விட்டு தனது தோழியுடன் தவறான தொடர்பு வைத்துக்கொண்டது குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார் ஜெர்மி.

எனது திருமண வாழ்க்கையில் நன்றாக சென்றுகொண்டிருந்தது, ஆனால் இரண்டு ஆண்டுகளில் நான் எதிர்பார்த்த மகிழ்ச்சி எனது மனைவியிடம் இருந்து எனக்கு கிடைக்கவில்லை.

எனது ஆசையை அவளிடம் பலமுறை தெரிவித்தும் அவளால் அதனை பூர்த்திசெய்யவில்லை. இதனால் வெறுப்பில் இருந்த நான் பலமுறை அவளிடம் சண்டையிட்டுள்ளேன்.

இந்த சந்தர்ப்பத்தில் தான் எனது தோழியை சந்தித்தேன். ஆரம்பத்தில் அவளிடம் எனது பிரச்சனையை பகிர்ந்துகொண்டேன், இதனால் எனக்கு உறுதுணையாக இருந்த அவளிடம் நட்பையும் தாண்டி தவறான தொடர்பை ஏற்படுத்திக்கொண்டேன்.

மேலும், எனது மனைவியிடம் விவாகரத்து கேட்டு தொந்தரவு செய்தேன். ஆனால் விவாகரத்து கொடுக்க மறுத்து எனது மனைவி சண்டையிட்டாள். என்னை அளவுகடந்து நேசித்தாள், நானும் அவளை நேசித்தாலும் எனக்கு மகிழ்ச்சி என்பது அவளிடம் இருந்து கிடைக்கவில்லை.

இப்படி தொடர்ந்து எங்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட சண்டையால் அவள் மனநலம் பாதிக்கப்பட்டாள். இருப்பினும் எனது தவறான தொடர்பை துண்டிக்க முடியாமல் அவதிப்பட்டேன்.

இந்நிலயில், மனநல நிபுணரிடம் சென்று நானும், எனது மனைவியும் தகுந்த ஆலோசனை பெற்றோம்.' சில மாதங்கள் கழித்து, குடும்ப வாழ்க்கையில் தாம்பத்யம் தேவை என்றாலும் அதனையும் தாண்டி இரு மனங்கள் இணைவது மிக முக்கியம் என்பது எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்தது.

தற்போது, எனது மனைவியின் மனநிலைமையை புரிந்துகொண்டு அவளுடன் மீண்டும் வாழ ஆரம்பித்துள்ளேன் என பகிர்ந்துள்ளார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்