ஆசையாக காதலித்து விவாகரத்தில் முடிந்த பிரபலங்களின் காதல் திருமணங்கள்

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

பிரபல திரை நட்சத்திரங்களின் வாழ்க்கையில் காதல் திருமணம் முறிவில் முடிந்திருக்கின்றன.

அப்படி உறவில் பிரிந்த நட்சத்திரங்கள் குறித்து பார்ப்போம்,

அரவிந்த் சாமி - காயத்ரி

16 ஆண்டு கால திருமண பந்தம் கடந்த 2010 ஆண்டுடன் முற்றுப் பெற்றது. காதல் திருமணம் செய்துகொண்ட இவர்கள், சமரப்பேச்சுக்கு இடமில்லாத வேறுபாடுகளைக் காரணம் காட்டி இவர்கள் விவாகரத்துப் பெற்றுக்கொண்டனர்.

இந்த ஜோடிக்கு ஆதிரா, ருத்ரா என்ற இரு குழந்தைகள் இருக்கின்றனர்.

கமல்ஹாசன் - சரிகா

முன்னணி திரை நட்சத்திரங்களாக திகழ்ந்த இவர்கள் இருவரும். காதலித்த போதிலிருந்தே ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

இதன் காரணத்தினால் குழந்தைகளும் பிறந்தனர். குழந்தை பிறந்த பின்னர்தான் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், கடந்த 2002 ஆண்டு சரிகாவை விவாகரத்து செய்துவிட்டார் கமல்.

பார்த்திபன் - சீதா

தமிழகத்தின் முன்னணி நடிகர்கள். காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன், ஓர் மகள் இருந்தனர்.

1990 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்கள், 2001 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

பரஸ்பர சம்மதத்துடன் பிரிவதாக கூறி விவாகரத்து வாங்கிக் கொண்டனர்.

பிரபு தேவா - ராமலதா

சினிமாவில் டான்ஸ் ஆடும் பெண்ணாக இருந்து வந்தவர் ரமலத் என்கிற லதா. இவரை தனது குடும்பத்தினரின் கடும் எதிர்ப்புகளை மீறி கடந்த 1995ம் ஆண்டு ரகசியமாக காதல் திருமணம் செய்து கொண்டார் பிரபுதேவா.

இந்தத் திருமணத்தை அவர் வெகு காலம் வரை பகிரங்கப்படுத்தவே இல்லை. ரகசிய மனைவியாகவே ரமலத்தை வைத்திருந்தார்.

இந்தத் தம்பதிக்கு மொத்தம் 3 குழந்தைகள். அதில் ஒரு பிள்ளை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டது. இந்த சோகத்தில் இருந்தபோதுதான் பிரபுதேவா- ரமலத் வாழ்க்கையில் நயன்தாராவால் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

ரகுவரன் - ரோகினி

ரகுவரனும், ரோகிணியும் நல்லபடியாக தான் வாழ்ந்து வந்தனர். ஆனால், ரகுவரனின் குடிப்பழக்கம் தான் இவர்களது பிரிவிற்கு காரணம் என்று கூறப்பட்டது.

ரகுவரனை மிக விரும்பியவர் ரோகினி, விவாகரத்து கூட விரும்பாமல் தான் வாங்கினார் என்று கூறப்பட்டது. பின்பு குடிப்பழக்கத்தில் இருந்த மீண்டு வந்த தருணத்தில் தான் ரகுவரன் காலமானார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers