பிற ஆண்களுடன் ஆபாச படத்தில் நான் நடித்ததை அவர் விரும்பவில்லை! காதல் கணவர் குறித்து நடிகை

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த நடிகை சன்னி லியோன் தற்போது மும்பையில் நல்ல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவருக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தனது காதல் கணவர் மற்றும் தங்களுக்கு காதல் மலர்ந்தது குறித்த தருணங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

நான் பிற ஆண்களுடன் சேர்ந்து நீலப் படங்களில் நடித்தது என் கணவர் டேனியல் வெபருக்கு பிடிக்கவில்லை. இதையடுத்து அவரே என்னுடன் சேர்ந்து நீலப் படங்களில் நடிக்கத் துவங்கினார்.

என் கணவர் என்னுடன் சேர்ந்து நீலப் படங்களில் பணியாற்றத் துவங்கிய பிறகு நாங்களே தயாரிப்பு நிறுவனம் துவங்கிவிட்டோம். என்னை பார்த்தவுடன் காதலில் விழுந்தார்.

ஆனால் எனக்கு அப்படி இல்லை. நான் டேனியல் வசித்து வந்த நியூயார்க் நகருக்கு சென்றபோது அவர் எனக்கு இமெயில் அனுப்பி உன் செல்போன் எண்ணை எனக்கு தர மாட்டாயா? என்று கேட்டிருந்தார்.

முதல் நாள் டேட்டிங் சென்றபோது நான் லேட்டாக சென்றேன். ஆனால் அவர் பொறுமையாக காத்திருந்தார். நான் அவரை சந்தித்து பேசிய பிறகு எங்களுக்கு இடையேயான ஒற்றுமையை தெரிந்து கொண்டோம். உணவகத்தில் நாங்கள் 3 மணிநேரமாக பேசிக் கொண்டிருந்தோம்.

3 மணிநேரம் 3 ஜென்மமாக உணர்ந்தேன். டேனியல் எனக்கு ப்ரொபோஸ் செய்தார். அவர் அமைதியாக, எளிமையாக எனக்கு பிடித்த மாதிரியே ப்ரொபோஸ் செய்தார். நானும் அவருக்கு ஒரு மோதிரத்தை பரிசளித்தேன். சில காலம் கழித்து இருவரும் திருமணம் செய்துகொண்டோம்.

சன்னி லியோனுக்கும், டேனியல் வெபருக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. அவர்களுக்கு 2 வயதில் நிஷா என்ற மகளும், நோவா, ஆஷர் என்ற இரட்டையர் மகன்களும் உள்ளனர்.

2017ம் ஆண்டு ஜூலை மாதம் லாத்தூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து நிஷாவை தத்தெடுத்தனர். நோவா, ஆஷர் ஆகியோர் வாடகை தாய் மூலம் கடந்த மார்ச் மாதம் பிறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்