திருமணமான குறுகிய காலத்தில் விவாகரத்து செய்த பிரபல தமிழ் நடிகர், நடிகைகள்

Report Print Raju Raju in உறவுமுறை

திரையுலகை சேர்ந்த பல முன்னணி நடிகர், நடிகைகள் திருமணமான குறுகிய காலத்திலேயே தங்களது துணையை விவாகரத்து செய்துள்ளனர்.

ராதிகா - பிரதாப் போத்தன்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராதிகா கடந்த 1978-ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார்.

இவர் 1985-ஆம் ஆண்டு பிரபல நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தனை மணந்தார்.

ஆனால் அடுத்த ஆண்டே (1986) பிரதாப்பை ராதிகா விவாகரத்து செய்துவிட்டார்.

பிரசாந்த் - கிரஹலட்சுமி

டாப் ஸ்டார் பிரசாந்த், கிரஹலட்சுமி என்ற பெண்ணை 2005-ல் திருமணம் செய்தார்.

ஆனால் கிரஹலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமானதை தன்னிடம் மறைத்துவிட்டார் என குற்றஞ்சாட்டிய பிரசாந்த் 2007-லேயே மனைவியிடம் விவாகரத்து கோரினார்.

ராஜ்கிரண் - செல்லம்மா

குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கு பெயர் போனவரான நடிகர் ராஜ்கிரண் செல்லம்மா என்ற பெண்ணை மணந்த நிலையில் குறுகிய காலத்திலேயே அவரை பிரிந்தார்.

பின்னர் நடிகை பத்ம ஜோதியை ராஜ்கிரண் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

சரத்பாபு - ரமா பிரபா

தமிழில் முன்னணி நடிகராக இருந்த சரத்பாபு கடந்த 1981-ல் ரமா பிரபா என்ற பெண்ணை மணந்தார்.

ஆனால் தம்பதியின் திருமண வாழ்க்கையில் விரைவில் கசப்பு ஏற்பட ஆறு ஆண்டுகளிலேயே மனைவியை சரத்பாபு பிரிந்துவிட்டார்.

சரிதா - வெங்கட சுப்பையா

1970-80களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கிய சரிதா 1975-ல் வெங்கட சுப்பையா என்பவரை திருமணம் செய்த நிலையில் ஒரு ஆண்டிலேயே அவரை விவாகரத்து செய்து விட்டார்.

சுவர்ணமால்யா - அர்ஜூன்

நடிகை, தொகுப்பாளினி என பன்முகத்தன்மை கொண்ட சுவர்ணமால்யா கடந்த 2002-ல் அர்ஜூன் என்பவரை மணந்து அமெரிக்கா சென்றார்.

ஆனால் திருமணமான ஒரே ஆண்டில் இந்தியாவுக்கு தனியாக சினிமாவில் நடிக்க அவர் திரும்பினார். இதுவே கணவரை பிரிய காரணமாகி விட்டதாக கூறப்பட்டது.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்