நடிகர் பாலாஜி எங்கு வைத்து நித்யாவிடம் காதலை சொன்னார் தெரியுமா? 21க்கும் 36க்கும் இடையில் மலர்ந்த காதல்

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

பெற்றோரின் எதிர்ப்பை மீறி நடிகர் தாடி பாலாஜியை திருமணம் செய்துகொண்டவர் நித்யா.

இவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், இவர்களது வாழ்வில் பிரச்சனை ஏற்பட்டு, பாலாஜியின் கொடுமைகளை இனியும் பொறுத்துகொள்ள முடியாது, அவருடன் சேர்ந்து வாழ்வது கனவிலும் நினைத்துகூட பார்க்க முடியாத என்று விவாகரத்து கோரியுள்ளார் நித்யா.

சமீபத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதும், இவர்கள் இருவருக்குள்ளும் இணக்கம் ஏற்படவில்லை.

ஆனால், பாலாஜியோ தனக்கு தனது மனைவியும், குழந்தையும் மிக முக்கியம், அவளை நான் காதலித்து தான் திருமணம் செய்துகொண்டேன், அவருடன் இணைந்து வாழ விரும்புகிறேன் என கூறுகிறார்.

காதல் மலர்ந்த கதை

ஆரம்பத்தில் நண்பர்களாக பழகி வந்த இவர்கள் நாட்கள் செல்ல காதலர்களாக மாறியுள்ளனர். ஒரு சூப் கடையில் வைத்து நித்யாவிடம் காதலை தெரியப்படுத்தியுள்ளார் பாலாஜி.

தனது பதிலை கூறுவதற்கு நித்யா 6 மாதங்கள் எடுத்துக்கொண்டாராம்,

நித்யாவுக்கும், பாலாஜியை பிடித்துப்போய்விட்டதால் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஆனால் இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே 15 வயது வித்தியாசம்.

திருமணத்தின்போது நித்யாவின் வயது 21, பாலாஜியின் வயது 36. எனது பெற்றோர் பார்த்து வைத்திருந்தால் கூட இப்படி ஒரு மாப்பிள்ளை எனக்கு கிடைத்திருக்கமாட்டார் என தொலைக்காட்சியின் அளித்த பேட்டி ஒன்றில் காதல் ததும்ப பாலாஜியிடம் நித்யா கூறியிருப்பார்.

மேலும், அந்த பேட்டியின்போது தனது கணவர் குடித்துவிட்டு வந்தால் மிக மோசமான கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவார், அதனை காது கொடுத்தும் கேட்க முடியாது எனவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments