தனது கணவரை உயிர் தோழிக்கு திருமணம் செய்து வைத்த வைத்த மனைவி

Report Print Raju Raju in உறவுமுறை
585Shares
585Shares
lankasrimarket.com

கணவரை காதலித்த தனது உயிர் தோழிக்கு அவரை திருமணம் செய்து வைத்த மனைவியின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மரிசா என்ற பெண்ணுக்கும், பென் என்பவருக்கும் திருமணமாகி பத்தாண்டுகள் ஆன நிலையில் இருவருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட தொடங்கியது.

மரிசாவின் வேலை திடீரென பறிபோன நிலையிலேயே கணவன், மனைவி இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரும் பிரிந்தார்கள். கணவன் மனைவியாக பிரிந்துவிட்டாலும் நல்ல நண்பர்களாக மரிசாவும், பென்னும் இருந்தார்கள்.

இருவரும் பிரிந்த சில மாதங்கள் கழித்து மரிசாவின் உயிர் தோழியான ஜெனி மரிசாவுக்கு போன் செய்து ஒரு இடத்துக்கு வர சொன்னார்.

மரிசா அங்கே சென்ற நிலையில், அவரின் முன்னாள் கணவர் பென்னும் தானும் சில மாதங்களுக்கு முன்னர் நட்பாகி தற்போது தீவிரமாக காதலிப்பதாக கூறினார்.

மேலும், அவரை திருமணம் செய்ய விரும்புவதாகவும், ஆனால் மரிசா அதற்கு சம்மதித்தால் தான் திருமணம் செய்வேன் எனவும் அவரிடம் ஜெனி கூறினார்.

காரணம், மரிசாவின் உயிர் நட்பை விட ஜெனி விரும்பவில்லை.

இதையெல்லாம் கேட்டு முதலில் சில நிமிடங்கள் யோசித்த மரிசா பின்னர் முழு மனதுடன் ஜெனி - பென் திருமணத்துக்கு சம்மதித்தார்.

இதையடுத்து சமீபத்தில் அவர்களின் திருமணம் நடக்க, முழு மனதோடு மரிசா தம்பதியை வாழ்த்தியுள்ளார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்