ஜாதி, மதம் பார்க்காமல் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகைகள்

Report Print Santhan in உறவுமுறை
665Shares

இந்தியாவில் ஜாதி, மதத்தை காரணம் காட்டி வேறு ஜாதி, மதத்தில் பெண்ணெடுத்து திருமணம் செய்வது என்பது நடக்காத காரியமாக உள்ளது.

அப்படியே யாராவது காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் கௌரவ கொலை என்ற பெயரில் கொன்றுவிடுவார்கள்.

ஆனால் தற்போது வளர்ந்து வரும் சமுதாயமோ இதை ஆதரிப்பதில்லை. அதுமட்டுமின்றி இந்தியாவின் முக்கிய பிரபலங்கள் சிலர் வேறு மதத்தில், வேறு ஜாதியில் காதலித்து கலப்பு திருமணம் செய்து மக்களுக்கு ஒரு முன்னுதாரணமாக உள்ளனர்.

அப்படி உள்ளவர்களைப் பற்றி தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

அமீர்கான்-கிரண் ராவ்

அமீர்கான் கடந்த 2002-ஆம் ஆண்டு தனது முதல் மனைவி ரீனாவை விவாகரத்து செய்தார். அதன் பின்பு

லகான் படத்தில் உடன் பணிபுரிந்த கிரண் ராவை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார்

அமீர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர். கிரண் ராவ் ஒரு கடவுள் நம்பிக்கை இல்லாத மதசார்பற்றவராக கருதப்படும் நபர். இவர்களுக்கு ஆறு வயதில் அசாத் ராவ் கான் என்ற மகன் உள்ளார்.

ஷாருக்கான் - கெளரி

ஷாரூக்கான் கௌரியை தனது 18 வயதில் இருந்தே காதலித்து வந்தார். இதையடுத்து இந்த ஜோடி கடந்த 1991-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டது.

ஷாருக் ஒரு இஸ்லாமியர் மற்றும் கெளரி ராஜ்புத் சேர்ந்தவர்.

ஹ்ரித்திக் ரோஷன் - சுசேன் கான்

இவர் தன்னுடைய குழந்தை பருவ தோழியான சுசேன் கானை கடந்த 2000-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதி விவாகரத்து செய்து கொண்ட போதிலும், விரைவில் ஜோடி சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரித்தேஷ் - ஜெனிலியா

நடிகையான ஜெனிலியா மங்களூர் கத்தோலிக்க கிறிஸ்துவர், இவரும் மகாராஸ்டிரா குடும்பத்தைச் சேர்ந்த ரித்தேஷ் என்பவரும் கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

சஞ்சய் தத் - மன்யாதா

மன்யாதா ஒரு இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர். இவரின் இயற்பெயர் தில்நவாஸ் ஷெய்க். இவரை சஞ்சய் தத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆண் - பெண் இரட்டையர் குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு 8 வயதாகிறது.

சயப் அலிகான் - கரீனா கபூர்

பட்டோடியின் நவாபான சயப் அலிகானுக்கு முதலில் திருமணமாகி இளம் வயதில் மகள் இருக்கிறாள். சயப் முதலில் திருமணம் செய்த பெண்ணும் பஞ்சாபி தான், தற்போது திருமணம் செய்திருக்கும் கரீனா கபூரும் பஞ்சாபி தான். இந்த ஜோடிக்கு தைமூர் அலி கான் என்ற மகன் உள்ளார்.

யுவராஜ் சிங் - ஹாசெல் கீச்

இந்திய அணியின் அதிரடி மன்னாக இருந்து வந்த யுவராஜ் சிங் தற்போது மோசமான பார்ம் காரணமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார்.

புற்றுநோயை வென்று தற்போது மீண்டும் சாதிக்க காத்துக் கொண்டிருக்கும் யுவராஜ் ஹாசெல் கீச் என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார்.

யுவராஜ் சிங் ஒரு சீக்கியர் மற்றும் ஹாசெல் பிரிட்டிஷ் - மௌரிஷியன் கிறிஸ்துவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்