வயதில் குறைவான ஆண்களை திருமணம் செய்த பிரபல நடிகைகள்

Report Print Raju Raju in உறவுமுறை
484Shares
484Shares
ibctamil.com

பிரபல திரைப்பட நடிகைகள் பலர் தங்களை விட வயதில் குறைவான ஆண்களை திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.

ஐஸ்வர்யா ராய் - அபிஷேக்பச்சன்

பிரபல நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய், நடிகர் அபிஷேக்பச்சனை கடந்த 2007-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அபிஷேக்கை விட ஐஸ்வர்யா ராய் 3 வயது பெரியவர் ஆவார்.

ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்தரா

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்தராவை கடந்த 2009-ல் மணந்தார். ராஜ்குந்தராவை விட ஷில்பா ஒரு வயது மூத்தவர்.

நம்ரடா ஸிடோகர் - மகேஷ்பாபு

பிரபல தெலுங்கு நடிகையான நம்ரடா, தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை கடந்த 2005-ல் மணந்தார். மகேஷை விட நம்ரடா 4 வயது மூத்தவர் ஆவார்.

ஐஸ்வர்யா - தனுஷ்

ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை கடந்த 2004-ல் திருமணம் செய்தார். தனுஷை விட ஐஸ்வர்யா இரண்டு வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிபாஷா பாசு - கரண் சிங்

நடிகை பிபாஷா பாசு கடந்த 2016-ல் நடிகர் கரண் சிங்கை திருமணம் செய்தார். கரண் சிங் பிபாஷாவை விட மூன்று வயது சிறியவர்.

அதுனா பபானி - பரான் அக்தர்

அதுனா பபானி நடிகர் பரான் அக்தரை கடந்த 2000-ஆம் ஆண்டு மணந்தார். அதுனாவை விட பரான் 7 வயது இளையவராவார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்