நெகிழ்ச்சியான பேஸ்புக் காதல்: திருமணத்திற்கு 2 நாட்கள் முன்பு காதலனை சந்தித்த காதலி

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

பேஸ்புக் மூலம் மலர்ந்த காதலால், மும்பையை சேர்ந்த சினேகா சௌத்ரி திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தனது காதலனை சந்தித்துள்ளார்.

28 வயதான சினேகா திருமணம் செய்துகொள்ள வேண்டும் என முடிவு செய்தபோதுதான் அறிமுகமானார் ஹர்ஷ். அவுஸ்திரேலியாவில் இருந்த ஹர்ஷிடம் இருந்து பேஸ்புக் வாயிலாக சினேகாவுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது.

அதில், நாம் இருவரும் ஒருவருக்கொருவர் அறிந்திருக்கிறோமா? என கேட்டுள்ளார்.

அதற்கு, சினோகாவும் பதிலளித்துள்ளார். அன்றுதான் இவர்கள் நட்பு ஆரம்பமாகியுள்ளது. அன்றிலிருந்து இவர்கள் இருவரும் தங்களது வாழ்க்கை மற்றும் நண்பர்கள் வாழ்க்கை குறித்தெல்லாம் பகிர்ந்துகொண்டனர்

ஒரு மாதம் ஒரு வருடமானது. எங்கள் நட்பு ஆழமானது. ஒரு நாளைக்கு 18 மணிநேரம் கூட பேசியுள்ளோம் என சினேகா கூறியுள்ளார். எங்களுக்குள் இருந்த இத்தனை தொலைவை நாங்கள் உணரவே இல்லை. எங்களின் உரையாடல் உயிர்ப்புடன் இருந்தது.

இப்படி என்னுடன் பேசிக்கொண்டிருக்கையில் ஒரு முறை, நான் காதலில் இருக்கிறேன் என கூறினார். மேலும் என்னுடன் பேசி முடிக்கும்போதெல்லாம், நான் உன்னை காதலிக்கிறேன் என கூறுவார்...நானும் நன்றி என தெரிவிப்பேன்.

இப்படி பலமுறை என்னிடம் கூறிக்கொண்டே இருந்தார். ஒருநாள், பென்குயின்கள் புகைப்படத்தை அனுப்பி என்னிடம் காதலை வெளிப்படுத்தினார். நானும் அதற்கு சம்மதம் தெரிவித்தேன்.

நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டதில்லை, திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அவரை சந்தித்தேன். பேஸ்புக்கின் மூலம் உரையாடிய நான், விமான நிலையத்தில் வைத்து அவரை முதல் முறையாக சந்தித்தபோது எனக்குள் ஒருவித எதிர்பார்ப்பு இருந்தது.

நாங்கள் இருவரும் பதிவுத்திருமணம் செய்துகொண்டோம். திருமணமாகி 3 ஆண்டுகள் கடந்துவிட்டது. அழகிய பயணங்கள், நிறைய கேள்விகள் என வாழ்க்கை பயணிக்கிறது. அதில் ஒரு கேள்வி பேஸ்புக்கில் யார் முதலில் நட்பு அழைப்பை கொடுத்தது என்பதுதான்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers