50 வயதில் காதல் திருமணம் செய்து கொண்ட மூன்று பிள்ளைகளின் தாய்!

Report Print Raju Raju in உறவுமுறை

50 வயதான விதவை பெண்ணொருவர் மூன்று பிள்ளைகளுக்கு தாயாக உள்ள நிலையில் நபர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இது ஒரு உணர்ச்சிபூர்வமான திருமணம் ஆகும், இது குறித்து கோமாலா என்ற அந்த பெண் கூறுகையில், சமீபத்தில் தான் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டேன்.

என்னுடைய 25 வயதில் என் கணவர் சாலை விபத்தில் மரணமடைந்தார். அப்போது எனக்கு 3 குழந்தைகள்.

என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் சின்னதாக தள்ளு வண்டி கடைப் போட்டு பிழைப்பு நடத்தினேன்.

அதில் வரும் வருமானத்தை வைத்து என் பிள்ளைகளை படிக்க வைத்து அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்தேன்.

அன்று தான் முதல் நாள் அவர் என் ஹொட்டலுக்கு வந்தார். என் கையால் உணவு பரிமாறினேன்.

சாப்பிட்டு விட்டு நீண்ட நாளைக்கு பிறகு என் தாயின் கைகளால் சாப்பிட்டது போல் இருந்தது என்று கூறி விட்டு சென்றார்,

பின்னர் தினமும் என் கடைக்கு வந்த அவர் ஒருநாள் என்னை காதலிப்பதாக கூறினார்.

50 வயது விதவையான நான் இதை எப்படி ஏற்று கொள்வேன்? அடுத்த நாளே நான் ஊரை காலி செய்துக் கொண்டு வேறு இடத்திற்கு வந்து விட்டேன்.

அங்கேயும் அவர் வந்த நிலையில் நான் என்ன தவறாக கேட்டேன்? பிடிக்கவில்லை என்றால் அப்போதே சொல்லி இருக்களாமே? என்று அவர் தரப்பு கேள்விகளை கேட்டார்.

நான் பதில் சொல்லாமல் யாரேனும் பார்க்கிறார்களா? என்று சுற்றி பார்த்தேன். அப்போது தான் என் மகன்களில் ஒருவன் இதைப் பார்த்து விட்டான். துடி துடித்து போனேன்.

அன்று இரவு, வீட்டில் புயல் வீசியது. தன் தாய் அப்படிப்பட்டவள் இல்லை என்று சற்றுக் கூட சிந்திக்காத என் மூன்று பிள்ளைகளும் என்னை அடித்து வீட்டை விட்டு துரத்தினர்.

என்னை அவர்களின் அம்மா என்று சொல்வதற்கு கூட அசிங்கமாக இருக்கிறது என்று சொல்லி என்னை நடு இரவில் வீட்டை விட்டு அனுப்பினார்கள்.

இதையடுத்து தற்கொலை செய்ய முடிவெடுத்து சென்ற நிலையில் என்னை திருமணம் செய்வதாக கூறிய நபர் மீண்டும் வந்து என்னை மணப்பீர்களா என கேட்டார்.

அப்படி இந்த 50 வயது கிழவிடம் என்னத்தான் இருக்கிறது என்று என்னை துரத்துகிறாய் என்று கேட்டேன்.

அதற்கு அந்த குரல் சொன்ன பதில், முதலில் திருமணம் செய்துக் கொள்ளுங்கள் பிறகு சொல்கிறேன் என்றது. இதோ நாங்கள் திருமணம் செய்துக் கொண்டோம். என்னை ஒரு அம்மா போல், தோழி போல் என் கணவர் வழி நடத்துகிறார்.

நாங்கள் சின்னதாக ஹொட்டல் வைத்துள்ளோம், எங்கள் உறவைப் பற்றி யார் என்ன சொன்னாலும் அதைப் பற்றி கவலையில்லை. நான் சாகும் போது என் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த இறுதியாக ஒரு உயிர் இருக்கும்.

அந்த மகிழ்ச்சி மட்டும் எனக்கு போதுமானது!

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers