இப்படியொரு கலாசாரமா? ஒரே நபரை திருமணம் செய்யும் தாய் மற்றும் மகள்

Report Print Raju Raju in உறவுமுறை

வங்கதேசத்தில் வாழும் மண்டி பழங்குடி பெண்களில் தாயும், மகளும் ஒரே நபரை திருமணம் செய்து கொள்ளும் கலாசாரம் இன்னும் இருந்து வருகிறது.

நாட்டின் மலைப்பகுதியில் வசித்து வரும் மண்டி பழங்குடியின பெண்களின் கணவர்கள் இறந்துவிட்டால் இறந்தவர்களின் அதே குலத்தில் உள்ள ஆண்களை அவர்கள் மறுமணம் செய்ய வேண்டும்.

அதேபோல பெண்ணின் கணவர் இறந்தபின்னர் குறித்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வார்.

அந்த பெண்ணுக்கு மகள் இருக்கும் பட்சத்தில் வயதுக்கு வந்தவுடன் தாயின் கணவரையே அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

இதை பல பெண்கள் விரும்பாவிட்டாலும் அந்த நடைமுறையில் தான் வாழ்ந்து வருகிறார்கள்.

ஒரலா டால்பட் (30) என்ற பழங்குடி பெண்ணுக்கும், அவர் தாய் மிட்டமோனி (51)-ம் ஒரே கணவருடன் தான் வாழ்ந்து வருகிறார்கள்.

ஒரலா கூறுகையில், என் அப்பா இறந்தபோது நான் சிறுமியாக இருந்தேன், இதையடுத்து என் அம்மா நோடன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நான் பெரியவள் ஆனவுடன் நோடையே திருமணம் செய்து கொண்டேன்.

எனக்கு இந்த கலாசாரம் பிடிக்கவில்லை, எனக்கென்று தனி கணவர் வேண்டும் என்பதே என விருப்பம் என கூறியுள்ளார்.

இது போன்ற திருமணங்கள் பாலியல் விடயங்களுக்காக மட்டும் செய்யப்படுவதில்லை, பெண்களின் சொத்துக்கள் மற்றும் உடமைகளை அவர்களை திருமணம் செய்யும் ஆண்கள் பாதுகாக்கவும் இந்த கலாசாரம் பயன்படுவதாக மண்டி பழங்குடியினர் நம்புகிறார்கள்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்