ஒரு ஆண் எப்படியிருந்தால் பெண்ணுக்கு பிடிக்கும்?

Report Print Deepthi Deepthi in உறவுமுறை
546Shares

ஆண்களே....நல்ல உடை அணிந்து பார்ப்பதற்கு மிக அழகாக இருப்பதைவிட ஒரு சில பழக்கவழக்கங்களையும் வளர்த்துக்கொண்டால் தான் பெண்கள் மனதில் நிரந்தர இடம்பிடிக்க முடியும்.

இல்லையெனில் உங்கள் அழகு எப்படி நிரந்தரம் இல்லையோ, அதே போன்று மனதில் இடமும் இல்லாமல் போய்விடும்.

பெண்களிடம் பேசும்போது நீங்க அப்படி இருக்கீங்க, இப்படி இருக்கீங்க என்று ரீல் விடுவதை விட எந்த ஒரு விடயம் பேசுவதாக இருந்தாலும் சற்று நிதானமாக அடக்கியே வாசியுங்கள்.

உறவில் நம்பிக்கை என்பது அசைக்க முடியாத தூண்போன்று இருக்க வேண்டும். எனவே, ஒரு பெண் தனது அனைத்து விடயங்களையும் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு நம்பிக்கையை கொடுங்கள்.

என்னதான் நீங்கள் ஜாலியான டைப்பாக இருந்தாலும், உங்களது எதிர்காலம் திட்டம் என்ன என்பதில் மிகத்தெளிவாக இருங்கள். ஏனெனில் நீங்கள் இப்படி ஸ்மார்ட்டாக திட்டம் போட்டு வாழ்ந்தால் பெண்களுக்கு பிடிக்கும்.

உங்கள் காதலி/ மனைவியர் அதிக கேள்விகளை கேட்டு உங்களை பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு, நீங்களே முன்வந்து, நான் இப்போது இங்கே இருக்கிறேன், இது செய்துகொண்டிருக்கிறேன் என்பதை அப்டேட் செய்துவிடுங்கள்.

திரைப்படங்களில் ஹீரோவுக்கு எப்படி பில்டப் கொடுக்கிறார்களோ....அந்த பில்டப் வேண்டாம். உங்களுக்கு ஏற்ற உடையை அணிந்து பார்ப்பதற்கு நீட்டாக இருந்தால் போதும்.

எந்த ஒரு விடயத்தையும் சொல்லில் காட்டுவதைவிட, செயலில் காட்டுங்கள். இதுபோன்று குணம் உள்ள ஆண்கள் பெண்களுக்கு எப்பொழும்தும் பிடித்தமானவர்களாக இருப்பார்கள்.

எங்காவது வெளியில் செல்வது என்றால், உங்கள் துணைக்கு பிடித்த இடத்தையும் தெரிந்துகொண்டு அதற்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.

பெண்களிடம் அதிக கேள்விகளை கேட்டு, அவர்களை அடக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். அதுபோன்று, சாக்லேட் பாயாக இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள், நல்ல பொறுப்பள்ள காதலனாக இருந்தால் தால் நல்லது

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்