காதல் வாழ்க்கை பற்றி மனம் திறக்கிறார் தாரை தப்பட்டை ஆனந்தி

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

சின்னத்திரை தொடர்கள் மற்றும் வெள்ளத்திரையில் தாரை தப்பட்டை படத்தில் நடித்தன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஆனந்தி.

இவருக்கு, சமீபத்தில் தனது காதல் கணவரான அஜய் என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது.

திருமணத்திற்கு பின்னர் தற்போது தொடர்களில் நடிக்காமல் இருக்கும் இவர், தனக்கு மிகவும் பிடித்தமான நடிப்புத்துறையை விட்டு விலகப்போவதில்லை, மீண்டும் ஏப்ரல் மாதத்தில் நடிக்கவருவேன் என கூறியுள்ளார்.

மேலும், தனது திருமண வாழ்க்கை மற்றும் காதல் கணவர் பற்றி இவர் கூறியுள்ளதாவது, எனது கணவர் அஜய்யை முதல் முறையாக கோயம்புத்தூரில் வீடு வாங்குவது தொடர்பாக சந்தித்தேன்.

அன்று தான் எங்களது முதல் சந்திப்பு ஆரம்பமானது. அதன்பிறகு அஜய் எனது பெற்றோருக்கு பழக்கமானார். நான் நடிப்பு மற்றும் நடனத்தில் ஆர்வமாக இருந்த காரணத்தால் திருமணம் பற்றி யோசிக்கவில்லை.

வீடு வாங்குவதில் அஜய்யுடன் ஏற்பட்ட பழக்கும் எனக்கு மட்டுமல்ல எனது பெற்றோருக்கும் தொடர்ந்தது.

அஜய்யின் பழக்கவழக்கம் மற்றும் அவரது குணநலன்கள் எனது பெற்றோருக்கு பிடித்துபோகவே, எனது பெண்ணை திருமணம் செய்துகொள்கிறாயா அவரிடம் எனது பெற்றோர் கேட்டுள்ளனர்.

இதற்கு அஜய் உடனேயே சம்மதம் தெரிவித்துவிட்டார். ஏனெனில் நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்துப்போய்விட்டது.

திருமணத்திற்கு முன்னர் அவர் என்மீது எடுத்துக்கொள்ளும் அதிக அக்கறை என்னை கவர்ந்தது.

இதனால், நானும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டேன், அதன் பின்னர் அன்புடன் கூடிய அதிகமான பரிசுகளை ஒருவருக்கொருவர் பறிமாறிக்கொண்டோம்.

பெற்றோரும், எங்கள் திருமணத்தை கடந்த மார்ச் மாதம் நடத்திவைத்தனர், தற்போது எனது திருமணவாழ்க்கை நன்றாக உள்ளது. அவர் தொழிலதிபராக இருந்தாலும், எனது துறையை நன்றாக புரிந்துவைத்துக்கொண்டு என்கு நல்ல ஆதரவு தருகிறார்.

இதனால் எனக்கு பிடித்தமான நடிப்பு பணியை தொடர்வேன் என கூறியுள்ளார்,

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்