கரீஷ்மா கபூரை அபிஷேக் பச்சன் பிரிந்தது எதற்காக?

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

பாலிவுட் உலகில் 2000 ஆம் ஆண்டில் காதல் பறவைகளாக பறந்தவர்கள் அபிஷேக்- கரீஷ்மா கபூர் ஜோடி.

1997 ஆம் ஆண்டு அமிதாப்பச்சனின் மூத்த மகள் ஸ்வேதா பச்சனின் திருமணம் நடைபெற்ற போது, கரிஷ்மா அந்த அந்த திருமணத்தில் அதிக ஈடுபாட்டோடு கலந்து கொண்டார்.

அப்போது இருந்தே அபிஷேக், கரிஷ்மா ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து காலர்களாக மாறினர். 5 ஆண்டுகளாக காதல் பறவைகளாக இருந்த இவர்களது திருமணத்திற்கு இருவீட்டார் தரப்பிலும் பச்சை கொடி காட்டப்பட்டது.

2002 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் திகதி அமிதாப்பச்சனின் பிறந்தநாள் விருந்தில் வைத்து, இவர்கள் இருவருக்கும் வெகு விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறவிருக்கிறது என அறிவிக்கப்பட்டது.

ஆனால், அடுத்த பிப்ரவரி மாதத்திலேயே, இவர்கள் இருவரும் தங்கள் உறவை முறித்துக்கொண்டதால் நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டது.

திருமணத்திற்கு பின்னர் கரிஷ்மா நடிக்ககூடாது என ஜெயா பச்சன் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் இந்த திருமணம் நின்று போனதாக கூறப்பட்டது.

மேலும், ஐஸ்வர்யா ராயுடன் அபிஷேக் பச்சனுக்கு ஏற்பட்ட திடீர் காதலர் இவர்கள் இருவரது உறவும் முறிந்துபோனது என கூறப்பட்டது.

தற்போது, ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொண்ட அபிஷேக் பச்சனுக்கு ஆரத்யாக எனும் மகள் உள்ளார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments