திருமணம் செய்ய சரியான வயது எது தெரியுமா?

Report Print Printha in உறவுமுறை

அனைவரது மனதிலும் திருமணம் என்ற வார்த்தையைக் கேட்டாலே ஒரு பயம் ஏற்படும் அல்லவா?

அதனால் ஆண்கள் மற்றும் பெண்கள் திருமணம் வேண்டாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பார்கள்.

ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை திருமணம் என்றால் தங்களது சுதந்திரத்தைப் பறி கொடுப்பதாக அர்த்தம் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

ஆனால் திருமணத்தை தள்ளிப் போடுவதால், உண்டாகும் பிரச்சனையைப் பற்றி அவர்களுக்கு தெரியவில்லை.

எந்த வயதில் திருமணம் செய்வது நல்லது?

திருமணமானது 28-30 வயதில் செய்துக் கொண்டால், உடனே குழந்தை பிறக்க வேண்டும் என்ற நிலைக்கு ஆளாக நேரிடும்.

சிலருக்கு குழந்தை பிறப்பதில் பிரச்சனைகள் ஏற்பட கூட வாய்ப்புகள் உள்ளது. இதனால் வாழ்க்கையில் எந்த ஒரு திட்டத்தையும் சரியாக செய்து சந்தோஷமாக அனுபவிக்க முடியாது.

அதுவே திருமணமானது 25 வயதில் நடந்தால், இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துக் கொள்வது, குழந்தைகளை படிக்க வைப்பது, வேலைக்குச் சென்று வருமானத்தை அதிகப்படுத்துவது இது போன்ற கடமைகளில் சரிவர சமாளிக்க முடியும்.

எனவே திருமணம் செய்ய சரியான வயது 25 தான் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments