உலகிலேயே மிகச்சிறந்த விவாகரத்து கடிதம்: கட்டாயம் படியுங்கள்

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

இரு மனங்கள் இணையும் விவாகத்தை பிரிப்பதற்கு விவாகரத்து என்ற ஒன்று தேவைப்படுகிறது.

மனதளவில் பிரிந்துவிட்டால் மட்டும் போதாது, சட்ட ரீதியாகவும் பிரிந்துவிட வேண்டும் என்பதற்காக நீதிமன்றம் செல்வது, ஜீவனாம்சம் என்ற பெயரில் சண்டைபோட்டுக்கொள்வது என பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து, இறுதியில் எதற்காக ஒரு திருமணத்தை செய்தேன் என்ற கேள்வியை கேட்டுக்கொள்ளும் அளவுக்கு விரக்தியடைகிறோம்.

மனம் ஒத்துப்போகாத வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் மௌமான முறையில் விலகிக்கொள்வதே மேல் என்று ஒருபோதும் யாரும் நினைப்பதில்லை.

மாறாக, சண்டை சச்சரவுகளுடன் விவாகரத்தை பெற்றுக்கொள்கின்றனர். ஆனால், இப்படியும் தனக்கு பிடிக்காத மனைவியிடம் வேடிக்கையான முறையில் விவாகரத்து பெற்றுக்கொள்ளலாம் என்பதை இந்த கடிதத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

மனைவியை விட்டு பிரிந்துசென்ற கணவன் எழுதிய கடிதம்

அன்புள்ள எனது மனைவிக்கு,

நான் உன்னை விட்டு நிரந்தரமாக பிரிந்துசெல்லும் தகவலையே இந்த கடிதத்தின் வாயிலாக தெரிவிக்கவிருக்கிறேன். உன்னை திருமணம் செய்து 7 ஆண்டுகளாக உன்னுடன் வாழ்ந்துள்ளேன்.

7 ஆண்டுகளாக உன்னுடன் நல்ல மனிதராக இருந்துள்ளேன் என்பதை காட்டுவதற்கு தற்போது என்னிடம் எதுவும் இல்லை, கடந்த 2 வாரங்களாக நரகத்தில் வாழ்வது போன்று இருந்தது எனக்கு.

கடந்த வாரம் உனது முதலாளி என்னை தொடர்பு கொண்டு, உங்கள் மனைவி தனது பணியை ராஜினாமா செய்து விட்டார் என்று என்னிடம் தெரிவித்தார்.

அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய நீ, வீட்டில் இருக்கும் எதையும் கவனிக்கவில்லை. எனது ஹேர்ஸ்டலை நான் மாற்றியுள்ளேன். உனக்கு பிடித்தமான உணவை தயார் செய்து வைத்துள்ளேன்.

ஆனால், 2 நிமிடத்தில் அந்த உணவுனை சாப்பிட்டுவிட்டு, தூங்க சென்றுவிட்டாய். என்னைப்பார்த்து ஒரு போதும் ஐ லவ் யூ என்ற வார்த்தையை கூறியது கிடையாது.

என்னுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற ஆசை உனக்கு கிடையாது. ஒரு கணவன் மனைவிக்குள்ளான உறவை ஒருபோதும் நீ விரும்பியது கிடையாது.

கடந்த 7 ஆண்டுகளான குடும்பம் என்ற பெயரில் என்னை நீ ஏமாற்றிவிட்டாய், இனிமேல் ஒருபோதும் என்னை நீ காதலிக்கமாட்டாய் என்பது எனக்கு தெரிந்துவிட்டது, இதனால் உன்னை விட்டு செல்கிறேன்.

பின்குறிப்பு: என்னை ஒரு போதும் நீ தேட வேண்டாம். நானும் உனது சகோதரியும் புது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்காக Virginia நாட்டிற்கு செல்கிறோம்.

இப்படிக்கு உன் முன்னாள் கணவர்.

இதற்கு மனைவி எழுதிய பதில் கடிதம் இதோ,

அன்புள்ள கணவருக்கு,

உங்களது கடிதம் கிடைத்தது, கடந்த 7 ஆண்டுகளாக நீங்கள் உண்மை கணவராக இருந்தது உண்மைதானா?

கடந்த வாரம் உனது ஹேர்ஸ்டைலை நான் கவனித்தேன். ஆனால், அது பார்ப்பதற்கு பெண்களின் ஹேர்ஸ்டைல் போன்று இருந்ததால், எந்த கருத்தினையும் தெரிவிக்காமல் சென்றுவிட்டேன்.

எனக்கு பிடித்தமான உணவினை சமைத்து வைத்தேன் என்று எழுதியுள்ளாய். ஆனால் நீ அவ்வாறு செய்யவில்லை. மாறாக எனது சகோதரியுடன் என்னை இணைத்து குழப்பத்தை ஏற்படுத்தி வைத்துள்ளாய். ஏனெனில் மாட்டிறைச்சி சாப்பிடுவதை நான் நிறுத்தி 7 வருடங்கள் கடந்துவிட்டது.

எனது பணியை ராஜினாமா செய்த நான், 10 மில்லியன் டொலர்களை உனக்கு தெரியாமல் சேமித்து வைத்திருந்தேன்.

இதனால் பணியில் இருந்து விலகியவுடன், நாம் இருவரும் ஜமைக்கா நாட்டிற்கு செல்லலாம் என்பதற்காக 2 டிக்கெட்டுகளை வாங்கிகொண்டு வீட்டிற்கு வந்தேன். ஆனால் நீ வீட்டை விட்டு சென்றுவிட்டாய்.

எதுவாயினும், உலகில் நடக்கும் ஒவ்வொரு விடயங்களுக்கும் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும்.

உனது வாழ்வில் சந்தோஷம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நீ இவ்வாறு செய்துள்ளாய். அந்த சந்தோஷம் உனக்கு கிடைக்கும் என நான் நம்புகிறேன்.

இந்த கடிதம் ஒன்றே, நம் இருவரின் விவாகரத்திற்கு போதுமான ஒன்று. எனவே நாம் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டோம் என்பதை புரிந்துகொள்.

இப்படிக்கு

உனது முன்னாள் மனைவி

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments