எனக்கு அப்பா தான் முதல் ஹீரோ! பெண் குழந்தைகள் கூற காரணம் என்ன?

Report Print Printha in உறவுமுறை

பொதுவாக ஆண் குழந்தைகள் அம்மாவையும், பெண் குழந்தைகள் அப்பாவையும் அதிகமாக விரும்புவார்கள்.

அதேபோல அப்பாக்களும் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் மீது தான் அதிக அன்பை செலுத்தி, மிகவும் பாசமாகவும் அக்கறையாகவும் இருப்பார்கள்.

ஏனெனில் ஆண்கள் மட்டுமே தங்களின் வாழ்வில் கிடைத்த புனித வரமாக மூன்று தாய்களைப் பெறுகிறார்கள்.

முதலில் தன்னை ஈன்ற தாய், இரண்டாவது தன்னை மனதில் சுமக்கும் மனைவி என்ற தாய், மூன்றாவதாக தனது மகள் வடிவிலான தாய் என்று மூன்று தாய்களை சந்திக்கிறார்கள்.

மகள்கள் தங்கள் அப்பாவை அதிகம் விரும்புவதற்கான காரணங்கள்
  • பெண் குழந்தைகள் தங்களின் வாழ்வில் நீண்ட நாட்களாக கண்ட நேர்மையான தோழனாகவும், சிறந்த தந்தையாக கருதுகின்றார்கள். இதனால் பெண்கள் தங்களது வாழ்நாளில் அதிக நேரம் தந்தையுடன் செலவழிப்பார்கள்.
  • பெண்கள், தங்களது வாழ்வின் சிறு வயதில் இருந்தே தன்னை பாதுகாத்து அன்பாக பார்த்துக் கொள்வதில் மிகவும் சிறந்தவர் தன்னுடைய தந்தை தான் என்கின்றார்கள்.
  • தனக்கு முதன் முதலில் இந்த உலகை அறிமுகம் செய்து, தனது ஒவ்வொரு பிறந்த நாட்களிலும் புதிய விஷயங்களைக் கற்றுத்தரும் சிறந்த ஆசானாக தந்தையை நினைக்கின்றார்கள்.
  • அப்பாக்கள் எப்போதும் தனது மகன்களிடம் காட்டும் கோபத்தை தன்னுடைய செல்ல மகள்களிடன் காட்ட மாட்டார்கள்.
  • மகள் கேட்கும் தன்னுடைய விருப்பங்களுக்கு முடியாது என்ற வார்த்தையே தனது மகள்களிடம் கூற மாட்டார்கள். இதனால் மகள் தனது அப்பா மீது அதிக அன்பையும் மதிப்பையும் வைத்துள்ளார்கள்.
  • தனது மகள் வெளியிடங்களுக்கு சென்று தாமதம் ஆகிவிட்டால், எவ்வளவு நேரம் ஆனாலும் பொறுமையாக காத்திருந்து பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து செல்வார்கள்.
  • மகள்களின் வாழ்வில் எந்த ஒரு பிரச்சனைகள் வந்தாலும் அதில் இருந்து மீட்டு வரும் சூப்பர் ஹீரோ தான் அப்பா.
  • ஒரு சில விஷயங்களில் அம்மாவை விட அப்பாக்கள் தான் அதிக தைரியத்தை அளித்து அதில் வெற்றி பெற தன்னம்பிக்கையை கூறுவார்.
  • பெண்களின் கண்ணீருக்கு உரியவர் கடைசி வரை தன்னுடன் இருக்க ஒவ்வொரு மகளும் விரும்பும் உறவு தான் அப்பா.
  • ஓர் மகளின் வாழ்க்கையில் அப்பா என்பவர் ஓர் உறவு மட்டும் அல்ல, தோழன், வழிகாட்டி, ஆசான், ஹீரோ, காவலன் இது அனைத்திற்கும் பொருளாக விளங்குபவர் தான் தன்னுடைய அப்பா.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments