மனைவியின் சோகத்திற்கு இது தான் காரணமா?

Report Print Printha in உறவுமுறை

பெண்கள் மற்றும் ஆண்களின் மனநிலைகள் முற்றிலும் வேறுபட்டது.

பொதுவாக வாழ்க்கையில் ஆண்கள் தங்களை சுற்றி இருப்பவர்களை மட்டும் யோசிப்பார்கள்.

ஆனால் பெண்கள் அவர்களை பற்றியும், அவர்களை சுற்றி இருப்பவர்களை பற்றியும் யோசிப்பார்கள்.

ஒருசில நேரங்களில் பெண்கள் மிகவும் சோகமாக இருப்பார்கள்.

ஆனால் அதற்கு என்ன காரணம் என்று ஒருசில ஆண்களால் புரிந்துக் கொள்ள முடிவதில்லை.

பெண்களின் சோகத்திற்கான காரணங்கள்
  • அச்சம், சந்தோஷம், மகிழ்ச்சி, காதல், போன்ற பலதரப்பட்ட அனைத்து உணர்சிகளையும் பெண்கள் அவர்களின் மனதில் அதிகளவில் வைத்துக் கொள்வதால், மன அழுத்தம் அதிகரித்து, சோக நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
  • அன்றாடம் பெண்கள் அதிக வேலை செய்வதன் மூலம் ஏற்படும் பல பிரச்சனைகள் காரணமாக உடல் அளவிலும், மனதளவிலும் அதிகமாக சோர்வடைந்து சோகமாக இருக்கிறார்கள்.
  • பெண்கள் தன் குடும்ப பொறுப்புகளான குழந்தை வளர்ப்பு, அலுவலக வேலை, சமையல், அறிவுரை கூறுவது, வீட்டு நிர்வாகம், வீட்டு வேலைகள் என்று அதிகமான பொறுப்புகளை கவனிப்பதால், சுமைகள் அதிகமாகி மகிழ்ச்சியை இழந்து சோகத்தில் மூழ்கிறார்கள்.
  • ஒரு பெண்ணின் வாழ்வில் அவளுக்கு பிடித்த வேலை, கணவனின் அன்பு மற்றும் அரவணைப்பு, பிள்ளை, வீடு, சொந்தங்கள் என்று இவற்றில் ஏதாவது ஒரு தனக்கு பிடிக்காத விஷயங்கள் நடக்கும் போது சோகமாக இருப்பார்கள்.
  • ஒரு பெண் தன்னுடைய கணவன், பிள்ளைகள், உறவுகள், வீடு என்று அனைவருக்கும் தேவையான நேரத்தை செலவழித்துவிட்டு தனக்கான நேரத்தை இழக்கும் போது அவள் தன் சந்தோஷத்தை இழக்க நேரிடுகிறது.
  • சில சமயங்களில் ஒருசில விஷயங்களுக்கு எதற்கு முதலில் முன்னுரிமை கொடுப்பது என்று தெரியாமல் குழம்பும் தருணங்களில் பெண்கள் தங்களின் மகிழ்ச்சியை இழக்கிறார்கள்.
  • தோல்விகள் ஏற்படும் போது, அதை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் பெண்களுக்கு குறைவாகவே உள்ளது. இதனால் தோல்விகள் ஏற்படும் சில நேரங்களில் தன்னுடைய மகிழ்ச்சியை தொலைத்து விடுகிறார்கள்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments