பெண்களே! ஆண்களை எப்போதும் கூலாக வைத்துக் கொள்ளணுமா?

Report Print Printha in உறவுமுறை

கணவன் கோபமாக இருக்கும் சூழ்நிலைகளில், என்ன செய்து புரியாமல் மனக் குழப்பத்தில் இருக்கும் மனைவிகளுக்கு அந்த நேரத்தில் ஒரு ஐடியாவும் தென்படாமல் இருக்கும்.

இனிமேல் அந்த கவலையை விடுங்கள். உங்கள் கணவர் கோபமாக இருக்கும் நேரத்தில் அவரை எப்படி கூலாக வைத்துக் கொள்வது என்பதற்காக இதோ சூப்பரான டிப்ஸ்!

  • ஆண்களுக்கு எப்போதும் அவர்களின் புத்திசாலித்தனத்தை பற்றி புகழ்ந்து பேசினால் மிகவும் பிடிக்கும். எனவே ஆண்கள் கோபமாக இருக்கும் போது அல்லது சண்டை போடும் போது அவர்களை பற்றி புகழ்ந்து பேசினால் போது உடனே ஆண்கள் கூல் ஆகிவிடுவார்கள்.
  • ஆண்கள் எப்போதுமே தங்களின் தனித்திறனை அதிகம் வெளிப்படுத்த வேண்டும், அதை மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். எனவே ஆண்கள் கோபமாக இருக்கும் போது அவர்களின் தனித்திறனைப் பற்றி பாராட்டி பேசுங்கள் அவர்களில் கோபம் காணாமல் போய்விடும்.
  • கணவன் மனைவி ஆகிய இருவருக்குள் மட்டும் உங்கள் காதலை வெளிப்படுத்தாமல், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர்கள் வீட்டிற்கு வந்தால், அவர்களிடம் உங்களின் கணவரை பற்றி பெருமையாக பேசுங்கள்.
  • ஆண்களுக்கு பொதுவாக அதிகமாக ஞாபக சக்தி இருக்காது. எனவே அவர்கள் கோபமாக இருக்கும் போது, தங்கள் வாழ்வில் நடந்த இனிய தருணத்தை நீங்கள் அவர்களுக்கு மீண்டும் நினைவுப் படுத்தினால் அளவற்ற மகிழ்ச்சி அடைவார்கள்.
  • தனி குடும்பத்தில் இருக்கும் தம்பதிகளில், கணவன் தொடர்ந்து கோபமாக இருப்பது போல இருந்தால், தன் குடும்பம், அல்லது கணவன் குடும்பத்தாரை வரவழைத்து உபசரிக்க வேண்டும். இதனால் அவர்களின் கோபம் குறைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
  • ஒருசில வேளைகளில் கணவன் அதிகமாக கோபத்தில் இருப்பதாக தெரிந்தால், உடனே நீங்கள் பக்தியுடன் மாறி அவர்களிடம் கூலாக பேசினால், ஆண்களின் கோபம் குறைந்து விடும்.
  • ஒருசில ஆண்கள் கோபத்தில் இருக்கும் போது அவர்களை சிறிது நேரம் தனிமையாக இருக்க வைப்பதால், அவர்களே கோபம் குறைந்து வந்து பேசுவார்கள். இது ஒருசில ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும்.
  • கோபத்துடன் இருக்கும் ஆண்களிடன், அவர்கள் மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்தி ஆசையாக பேசி, சற்று நெருக்கம் காண்பித்தால், கோபம் பஞ்சாக பறந்து போய்விடும்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments