நடிகர் விஜய்யின் அழகான காதல் கதை

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

அதிரடி ஆட்டம், அனல் பறக்கும் வசனம் என திரையில் பட்டையை கிளப்பும் நடிகர் விஜய், தனது நிஜ வாழ்க்கையில் மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவர்.

இவரது திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர் சங்கீதாவை காதலித்துதான் திருமணம் செய்துகொண்டார் என்பது இவருக்குள் மறைந்திருக்கும் ஒரு அழகிய காதல் கதை.

பூவே உனக்காக படத்தினை பார்த்த சங்கீதாவுக்கு விஜய்யை மிகவும் பிடித்துவிட்டது. பிறகென்ன உடனடியாக அவரை சந்தித்துவிட வேண்டும் என நினைத்து லண்டனில் இருந்து பறந்து இந்தியா சென்றுள்ளார்.

அந்த நேரத்தில் விஜய் காலமெல்லாம் காத்திருப்பேன் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால், நாம் வீட்டில் சந்தித்து பேசலாம் என கூறியிருக்கிறார்.

விஜய்யின் வீட்டிற்கு சென்ற சங்கீதாவை, ஷோபாவுக்கும் சந்திரசேகருக்கு மிகவும் பிடித்துவிட்டது. இந்த சந்திப்பின் மூலம் விஜய்யும், சங்கீதாவும் பழக ஆரம்பித்தனர்.

அதன்பின்னர், சங்கீதா இரண்டாம் முறையாக வீட்டிற்கு வந்தபோது, சந்திரசேகர் அவரை பார்த்து எனது மகனை திருமணம் செய்து கொள்கிறாயா? என கேட்டுள்ளார்.

இதற்கு சங்கீதாவும், நீங்கள் என்ன செய்தாலும் எனக்கு சம்மதம் என தெரிவித்துள்ளார். ஆக மொத்தத்தில் விஜய்யும் சங்கீதாவும் தங்கள் காதலை வீட்டில் தெரிவித்து சம்மதம் வாங்கவில்லை. பெற்றோரே தெரிந்துகொண்டு, இவர்கள் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments