திருமணத்திற்கு பின்பும் காதலிக்க: இதோ சூப்பரான டிப்ஸ்!

Report Print Printha in உறவுமுறை

திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பது நம் முன்னோர்களின் கருத்து. இன்றைய காலங்களில் காதல் திருமணங்கள் தான் அதிகமாக நடக்கின்றது.

காதலிக்கும் பெண்களும், ஆண்களும் திருமணத்திற்கு முன்பு ஒருவர் மீது ஒருவர் நிறைய அன்பு செலுத்துவார்கள்.

திருமணம் முடிந்த பின் குடும்ப முன்னேற்றத்திற்காக பொருளாதாரத்தில் மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து காதலித்து திருமணம் செய்ததையே மறுந்து விடுவார்கள்.

இதனால் ஒருவருக்கொருவர் மீது பல மனஸ்தாபங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் பிரிவுகள் உண்டாக காரணமாக உள்ளது.

இந்த மாதிரியான பிரச்சனைகளை குடும்ப வாழ்வில் ஏற்படாமல் இருக்க திருமணத்திற்கு பின்பும் ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருக்க வேண்டும்.

அதற்கான சூப்பர் டிப்ஸ் இதோ!

கணவர், மனைவி சொல்லும் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து கேட்க வேண்டும். மனைவி கணவரின் கடமைகள் முதன்மையானது என்று நினைத்து ஒருவருக்கொருவர் கூறும் வார்த்தைகளை இதயப்பூர்வமாக பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.

தம்பதியர்கள் இருவரும் பேசும் போது, எதிர்மறையான வார்த்தைகளை தவிர்த்து, இல்லை என்பதை விட “ஆம் நம்மால் முடியும்” என்ற சொல்லை பயன்படுத்துவதால்,உங்களின் உறவுகள் வலுவாக இருக்கும்.

குடும்பத்திற்காக மனைவி, குழந்தைகளிடம் அதிக நேரத்தை செலவிட வேண்டும்.

கணவன் மனைவிகளிடையே இருக்கும் பேச்சுவார்த்தைகள் என்றுமே குறைந்து விடக்கூடாது. ஏனெனில் அதுவே பிரிவுகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றது.

தம்பதியர்களிடையே ஏற்படும் தவறுகளை ஒருவருக்கொருவர் சுட்டிக் காட்டி பேசுவதை விட இருவர்களும் சேர்ந்து திருத்திக் கொள்வது மிகவும் நல்ல உறவினை மேம்படுத்தும்.

கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அன்பாக இருக்க வேண்டும் என்பதை மனதில் புரிந்துக் கொண்டு வீட்டு வேலைகள், குழந்தைகள் பராமரிப்பு போன்ற வேலைகளை பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.

தம்பதிகளுக்கு இடையே உண்டாகும் சிறிய பிரச்சனைகளாக இருந்தாலும், பிரச்சனையை மற்றவர்களிடம் கொண்டு செல்வதை தவிர்த்து, தாங்களாகவே சரிசெய்துக் கொள்ள வேண்டும்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments