உணர்ச்சிகளை அடக்கி வைப்பது ஆபத்தா?

Report Print Gokulan Gokulan in உறவுமுறை

ஓர் ஆணோ அல்லது பெண்ணோ சுய இன்பம் கொள்வது சாதாரண நிகழ்வு தான் என்ற போதிலும், உணர்ச்சிகளை நீண்ட நாட்களாக அடக்கி வைப்பதன் விளைவு தான் என கூறப்படுகிறது.

இதனால் உடலுக்கு சில நன்மைகள் கிடைத்தாலும், அளவுக்கு அதிகமாக செய்யும் போது பல்வேறான பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது.

சமீபத்தில் நடத்திய கருத்துக்கணிப்பில் 70-94 சதவீத இளம் ஆண்கள்/பெண்கள் இதை செய்வதாகவும் வயது அதிகரிக்க அதிகரிக்க இதன் மீதான நாட்டம் குறைவதாகவும் தெரியவந்துள்ளது.

ஆண்கள் மட்டுமே செய்வதாக இதுவரையிலும் கருதப்பட்ட நிலையில், பெண்களும் சுய இன்பம் கொள்கின்றனர் என தெரியவந்துள்ளது, ஆனால் இதை பற்றி வெளியே சொல்லத்தான் கூச்சப்படுவார்கள்.

மேலும் திருமணமான பல ஆண்கள் சுய இன்பம் காண்பார்கள், ஆனால் தன் துணை முன் அதை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

சுய இன்பம் என்பது ஒருவரின் உணர்ச்சி சம்பந்தப்பட்ட விடயமே தவிர, இதற்கும் குணத்திற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments