கெமிஸ்ட்ரி...கெமிஸ்ட்ரின்னு சொல்றாங்களே! அப்படின்னா என்ன?

Report Print Printha in உறவுமுறை

கெமிஸ்ட்ரி என்பது வேதியியல் பாடத்தில் மட்டும் இல்லை, நம்முடைய வாழ்க்கையிலும் தான் இருக்கிறது.

பொதுவாக காதலிப்பவர்கள் கெமிஸ்ட்ரி என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் இருக்க மாட்டார்கள்.

வேதியியல் பாடத்தில் இருக்கும் இந்த கெமிஸ்ட்ரியானது எப்படி காதலில் உட்புகுந்தது என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்!

நமது மூளையில் நிகழும் இரசாயன மாற்றங்களை, அதாவது இந்த கெமிக்கல் ரியாக்ஷன்களை கட்டுப்படுத்த முடியாமல், ஒருவர் மீது அதிகமான ஈர்ப்பை காண்பிக்க தோன்றும், இதற்கு பெயர் தான் கெமிஸ்ட்ரி என்று கூறுகின்றனர்.

கெமிஸ்ட்ரி என்பது அனைவருக்கும் ஒரே மாதிரி இருக்காது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் ஈர்ப்பு மற்றும் அறிகுறிகள் காணப்படும்.

மனம், உடல், உணர்வு போன்றவை ரீதியானது தான் கெமிஸ்ட்ரி என்று கூற முடியாது. இந்த மூன்றில் எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம் அல்லது மூன்றாகவும் கூட இருக்கலாம்.

எதார்த்தமாக பார்த்த ஒருவரை உங்களை அறியாமல் அவர்களை பற்றிய சிந்தனைகளை கொண்டு அவர்கள் மீது ஈர்ப்பையும் கொண்டு வருவீர்கள், இதுவே கெமிஸ்ட்ரியின் தொடக்கமாக இருக்கலாம்.

ஒருவரை பார்க்கும் போழுது உங்களுக்கு ஒருவித படபடப்பு, வியர்த்து கொட்டும், இதயத்துடிப்பு அதிகரிக்கும், இதுவும் ஒருவித உடல்ரீதியான கெமிஸ்ட்ரி தான்.

ஒருசிலரை பார்க்கும் பொழுது அவர்கள் மீது நல்ல உணர்வு ஏற்பட்டு, அவருடனே காலத்தை கழித்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று தோன்றுவதே உணர்வு ரீதியான கெமிஸ்ட்ரி என்று கூறப்படுகிறது.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments