உங்க பொண்டாட்டிக்கு பிடிச்ச மாதிரி இருக்கணுமா? இதோ சூப்பரான ரகசியங்கள்

Report Print Printha in உறவுமுறை
994Shares

திருமணம் என்ற பந்தத்தில் இல்லறம் இனிதே சிறக்க, இருவரும் வெறும் கணவன் மனைவியாக மட்டும் இருந்தால் போதாது.

உங்களின் துணைக்கு நல்ல தோழமையாகவும் இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

  • எப்போதுமே டிவி, பேஸ்புக் என மூழ்கி கிடக்காமல், மனைவிக்காக நேரத்தை செலவழியுங்கள், ஒருவர் மீது ஒருவர் அதிக கவனம் செலுத்தி மனம் விட்டு பேசுங்கள்.
  • ஒருவருக்கு ஒருவர் நன்றாக மனம் விட்டு பேச வேண்டும். இதனால் ஒருவர் நினைப்பதை வெளியில் சொல்லாமலேயே மற்றொருவர், அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை உணர்வுப்பூர்வமாக தெரிந்து கொள்ளலாம்.

  • உங்களின் துணைக்கு பிடித்தமானதை தெரிந்துக் கொண்டு அவர்களின் முகத்தில் புன்னகை தவழ வைக்க அவர்களுக்கு பிடித்தமானதை விடயங்களை அடிக்கடி செய்ய வேண்டும், சமையலறையில் செய்யும் சிறு சிறு உதவியாக கூட இருக்கலாம்.
  • இருவரும் ஒன்றாக சேர்ந்து கோவில், சினிமா, மார்கெட் போன்ற இடங்களுக்கு மறவாமல் சென்று வாருங்கள், இதனால் இருவருக்கும் இடையே உள்ள இணைப்பு அதிகரித்து, அன்பு பெருக்கெடுத்து நல்ல தம்பதிகளாக இருக்கலாம்.
  • எப்போதும் ஒன்றாகவே இருவரும் சாப்பிடுங்கள், நடந்து செல்லும் போது ஒன்றாக கைகளை கோர்த்து செல்லுங்கள், இரவில் தூங்கும் போதும் ஒன்றாக தூங்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இருவருக்கும் எவ்வளவு வேலைகள் இருந்தாலும் துணையுடன் இருப்பதற்கான நேரத்தை ஒதுக்குங்கள்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments