கொழும்பில் காணி வாங்க காத்திருப்போருக்கு.....!

Report Print Vethu Vethu in வீடு காணி

கொழும்பு மாவட்டத்தில் காணி விலை அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டு ஜுன் மாதம் முடிவடைந்த காலகட்டத்தில் காணி விலை 12.6 சதவிகிதத்தினால் அதிகரித்துள்ளதென மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்திலுள்ள காணி விலைகளில் தொடர்வதாக மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் அறிக்கைக்கமைய நூற்றுக்கு 11.9 வீதம் குடியிருப்பு காணி விலையும், 11.6 வீதம் வர்த்தக காணி விலையும் 14.6 வீதம் தொழிற்துறை காணி விலையும் அதிகரித்துள்ளது.

ரியல் எஸ்டேட் துறையில் முன்னேற்றங்களை கண்காணிக்கும் பொருட்டு, மத்திய வங்கி பல சுட்டெண்களை தொகுத்து பகுப்பாய்வு செய்து வருகிறது.

1998 ஆம் ஆண்டு முதல் கொழும்பு மாவட்டத்தை உள்ளடக்கிய வருடாந்த காணி விலை சுட்டெண் (LPI) இந்த விடயங்களுக்கான அடையாளங்களில் ஒன்றாகும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காணி விலை சுட்டெண்ணின் கூட்டுப் பணிகளில் கொழும்பு மாவட்டத்தின் 5 மாவட்ட செயலக பிரிவுகளின் 50 மையங்களை உள்ளடக்கிய காணி விலைத் தரவை இலங்கை மத்திய வங்கி பயன்படுத்தியுள்ளது.

மதிப்பீட்டு திணைக்களத்தினால் சேகரிக்கப்பட்ட தகவல்களுக்கமைய இந்த தரவு தயாரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, தெஹிவளை, ஹோமாகம, கடுவெல மற்றும் கெஸ்பெவா ஆகியவை காணி விலை சுட்டெண்ணில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்கள் ஆகும்.

மேலும் வீடு காணி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்