வீட்டு மனைகள் வாங்கப் போறீங்களா? இதை கண்டிப்பாக தெரிந்துக் கொள்ளுங்கள்

Report Print Printha in வீடு காணி

தற்போதய காலகட்டத்தில் புறநகர் பகுதிகளில் வீட்டு மனை வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எனவே அவ்வாறு ஒருவர் வீட்டு மனைகள் வாங்கும் போது, ஒருசில விதிமுறைகளை கட்டாயம் தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

வீட்டுமனைகள் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
  • வீட்டு மனையின் மூலப்பத்திரம் எனப்படும் தாய் பத்திரத்தை பெற்று, அதை சரிவர படித்து அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.
  • நிலத்தின் சம்பந்தப்பட்ட மனைக்கு யாரெல்லாம் உரிமையாளராக இருந்திருக்கிறார்கள்..? என்பதையும் அதன் உரிமை சம்பந்தப்பட்ட சில விஷயத்தை பற்றி தெரிந்துக் கொள்ள 30 ஆண்டுகளுக்கான வில்லங்க சான்றை வாங்கி பார்க்க வேண்டும்.
  • நிலத்தின் சம்பந்தப்பட்ட மனை கிராம பகுதியை சார்ந்தது என்றால் அதன் நிர்வாக அதிகாரியை சந்தித்து வீட்டுமனைக்கான தாலூகா அலுவலகம் தொடர்புடைய ஆவணங்கள் பற்றி விசாரிப்பதோடு, அதன் ‘பீல்டு மேப்’ மற்றும் ‘அ பதிவேடு’ ஆகியவற்றையும் வாங்கி பார்க்க வேண்டும்.
  • நிலத்தின் சான்றில் சர்வே எண், உட்பிரிவு செய்யப்பட்ட விவரம், உரிமையாளர் பெயர் போன்ற விவரங்கள் இருக்கும். குறிப்பிட்ட சொத்து வாங்கப்படும் போது, அதன் விபரங்கள் ‘அ பதிவேட்டில்’ உள்ளதா என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.
  • நிலத்தில் மனை நகர்ப்புறத்தில் இருந்தால், அப்பகுதி தாலூகா அலுவலகத்தில் அதன் நிரந்தர நிலப்பதிவேட்டில் சர்வே எண், உட்பிரிவு, வீடாக இருந்தால் கதவு எண், உரிமையாளர் பெயர், சொத்தின் நான்கு எல்லைகள், சொத்தின் அளவீடுகள் போன்ற விவரங்களை பார்க்க வேண்டும்.
  • நிலத்தின் கடைசியாக சொத்து வரி செலுத்தியதற்கான ரசீது போன்றவற்றை வைத்து ‘லீகல் ஒப்பீனியன்’ பெற்று மனை வாங்குவது பற்றி முடிவு எடுப்பது பாதுகாப்பானது.
  • நிலத்தின் பத்திரத்தில் உள்ள அளவுகளுக்கும் சர்வே செய்யும் போது கிடைக்கக்கூடிய அளவுகளுக்கும் வித்தியாசங்கள் இருக்க வாய்ப்பு உண்டு. எனவே அதை கவனிக்க வேண்டும்.
  • வீட்டு மனைகள் வாங்கும் போது, அக்ரிமெண்டு போடுவதற்கு முன் நிலத்தின் உரிமையாளரின் இருப்பிடம் உள்ளிட்ட முக்கியமான தகவல்களை சரியாக அறிந்த பிறகு முடிவெடுப்பதுதான் சிறந்தது.
  • வீடு கட்டுவது அல்லது முதலீட்டு அடிப்படை ஆகிய எதுவாக இருந்தாலும் மனைக்கான சாலைகள் அளவு குறைந்தபட்ச அகலம் 23 அடியாக இருப்பது முக்கியம்.
  • நாம் வாங்கும் மனையின் மொத்த அளவு 1200 சதுரஅடி அல்லது அதற்கும் மேலாக இருக்குமாறு வாங்க வேண்டும். ஏனெனில் இதனால் எதிர்காலத்தில் வரக்கூடிய பல சிக்கல்களை தவிர்க்கலாம்.

மேலும் வீடு காணி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments