உங்களில் எத்தனை பேருக்கு இது தெரியும்?

Report Print Ramya in வீடு காணி

ஒரு காணிப் பத்திரத்தை (Deed) எவ்வாறு பதிவு செய்வது என்பது சிலருக்கு தெரியாத விடயம். இது குறித்து தெளிவில்லாமல் இருப்பவர்களுக்காக இந்த தகவல் வழங்கப்படுகின்றது.

முதலில் இந்த விடயத்துடன் தொடர்புடைய அமைப்பு பதிவாளர் நாயக திணைக்களம் ஆகும்.

ஆவணம் (பத்திரம்) ஒன்றை உரிய பதிவாளரிடம் பதிவு செய்ய வேண்டும் என்றால் பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

முதலாவது- குறித்த பத்திரங்களுக்கு சட்டப்பூர்வ ஒரு தலைப்பு இட வேண்டும், பின்னர் அந்த தலைப்பைக் கொண்டு அறிக்கை பெற வேண்டும்.

இரண்டாவது- குறித்த பத்திரம் கட்சிகள் அல்லது சாட்சியங்கள் மூலம் கையொப்பமிட்டு உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

மூன்றாவது- உரிய காணிப்பதிவாளருக்கு குறித்த பத்திரத்தை வழக்கறிஞர் அல்லது பத்திரத்தை வாங்குபவர் ஊடாக சமர்ப்பித்தல் வேண்டும்.

முத்திரைத் தீர்வை பின்வருமாறு செலுத்த வேண்டும்.

முதலில் செலுத்தும் 1000 ரூபாவிற்கு 3% படியும் எஞ்சிய பணத்திற்கு 4% படியும் தீர்வை செலுத்த வேண்டும்.

நான்காவது- காணிப்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரத்தை பதிவு செய்ய வேண்டும்.

ஐந்தாவது- பதிவு செய்த பின்னர், குறித்த பத்திரத்தை தபால் மூலம் அல்லது பதிவுத் தபால் மூலம் அனுப்பிவைக்க வேண்டும்.

மேலும் வீடு காணி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments