ஹெரி பொட்டர் வாழ்ந்த வீடு விற்பனைக்கு

Report Print Steephen Steephen in வீடு காணி

உலகம் முழுவதும் சிறுவர் முதல் பெரியவர்கள் அனைவரது அன்பை வென்றெடுத்த கற்பனை கதாபாத்திரமான ஹெரி பொட்டர் கதையில் வரும் ஹெரி பொட்டர் வாழ்ந்தாக கதையில் கூறப்படும் வீடு விற்பனை செய்யப்பட உள்ளது.

ஹெரி பொட்டர் திரைப்படங்களில் ஹெரி பொட்டர் வாழ்ந்தாக காட்டும் வீட்டை அதன் தற்போதைய உரிமையாளர் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளார்.

4 லட்சத்து 75 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்களுக்கு இந்த வீடு விற்பனை செய்யப்பட உள்ளது.

வீட்டின் தற்போதைய உரிமையாளர் இந்த வீட்டை 2010 ஆம் ஆண்டு கொள்வனவு செய்துள்ளார்.

2 லட்சத்து 90 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்களுக்கு அவர் இந்த வீட்டை கொள்வனவு செய்தார்.

வீட்டை விற்பதற்காக வீட்டின் உரிமையாளர் வீட்டை தற்போது நவீனமயப்படுத்தியுள்ளார்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பிலும் புரட்சியை ஏற்படுத்தியது ஹெரி பொட்டர் என்ற கதையை பிரிட்டனை சேர்ந்த ஜே. கே. ரௌலிங் என்ற பெண் எழுத்தாளர் எழுதினார்.

அவர் எழுதிய ஹெரி பொட்டர் கதைகளில் சில திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளன.

1997-ம் ஆண்டு ஜுன் 30 ஆம் திகதி தி ரெளலிங், ஹாரி பாட்டர் தொடரில் முதலாவது புத்தகத்தை வெளியிட்டார்.

இந்த புத்தகம் விற்பனையில் சாதனை படைத்தது ,இதனால் இப்புத்தகம் 7 பாகங்களாக எழுதப்பட்டு வெளியிடப்பட்டன.

உலகம் முழுவதும் 300 மில்லியனுக்கும் மேற்பட்ட ஹெரி பொட்டர் புத்தக பிரதிகள் விற்பனை செய்யப்பட்டு சாதனைப்படைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தப் புத்தகம் இதுவரை 63 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

மேலும் வீடு காணி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments