வடக்கில் இப்போது படையினர் வசமுள்ள காணி எத்தனை ஏக்கர் தெரியுமா?

Report Print Samy in வீடு காணி

வட மாகாணத்தில் தற்போது முப்படையினர் வசம் 27,230 ஏக்கர் காணிகள் இருப்பதாக தேசிய நல்லிணக்கச் செயலணி தெரிவித்துள்ளது.

தேசிய நல்லிணக்கச் செயலணியினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வெளியீட்டிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

குறித்த தரவுகளின் அடிப்படையில் இராணுவம், கடற்படை , விமானப் படையினர் வசமுள்ள காணிகளில் அரச காணிகள் தனியாகவும் தனியாருக்குச் சொந்தமான காணிகள் தனியாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில்

இராணுவத்தினர் வசம் 3 ஆயிரத்து 92 ஏக்கர் தனியார் காணிகளும், 548.5 ஏக்கர் அரச காணிகளும் உள்ளன.

கடற்படையினர் வசம் 513 ஏக்கர் தனியார் காணிகளும், 108 ஏக்கர் அரச காணிகளும் உள்ளன.

விமானப் படையினர் வசம் 646.5 ஏக்கர் தனியார் காணிகளும், 391.5 ஏக்கர் அரச காணிகளும் உள்ளன.

இதன்படி யாழ். மாவட்டத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 252 ஏக்கர் தனியார் காணிகளும், 1047. 72 ஏக்கர் அரச காணிகளுமாக மொத்தம் 5 ஆயிரத்து 299.39 ஏக்கர் நிலம் படையினர் வசம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில்

இராணுவத்தினர் வசம் 217.5 ஏக்கர் தனியார் காணிகளும், 1372.5 ஏக்கர் அரச காணிகளும் உள்ளன.

கடற்படையினர் வசம் 10.38 ஏக்கர் தனியார் காணிகளும், 380.63 ஏக்கர் அரச காணிகளும் உள்ளன.

விமானப்படையினர் வசம் எந்த நிலங்களுமே இல்லை.

இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்தமாக 227.91 ஏக்கர் தனியார் காணிகளும், 1756.15 ஏக்கர் அரச காணிகளுமாக மொத்தம் 1984.06 ஏக்கர் நிலங்கள் படை வசம் உள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில்

இராணுவத்தினர் வசம் 540.29 ஏக்கர் தனியார் காணிகளும், 6 ஆயிரத்து 934.38 ஏக்கர் அரச காணிகளும் உள்ளன.

கடற்படையினர் வசம் 671 ஏக்கர் தனியார் காணிகளும், 44.80 ஏக்கர் அரச காணிகளும் உள்ளன.

விமானப் படையினர் வசம் தனியார் காணிகள் எவையும் இல்லை. 958 ஏக்கர் அரச காணிகள் உள்ளன.

இதன்படி முல்லை மாவட்டத்தில், ஆயிரத்து 211.29 ஏக்கர் தனியார் காணிகளும், 7 ஆயிரத்து 937.18 ஏக்கர் அரச காணிகளுமாக மொத்தம் 9 ஆயிரத்து 148.47 ஏக்கர் நிலங்கள் படையினர் வசம் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில்

இராணுவத்தினர் வசம் 20.45 ஏக்கர் தனியார் காணிகளும், 1942.27 ஏக்கர் அரச காணிகளும் உள்ளன.

கடற்படையினர் வசம் 101 ஏக்கர் தனியார் காணிகளும், 1003.70 ஏக்கர் அரச காணிகளும் உள்ளன.

விமானப் படையினர் வசம் தனியார் காணிகள் இல்லாத போதும் 227 ஏக்கர் அரச காணிகள் உள்ளன.

இதன்படி மன்னார் மாவட்டத்தில், 121.45 ஏக்கர் தனியார் காணிகளும், 3 ஆயிரத்து 172.97 ஏக்கர் அரச காணிகளுமாக மொத்தம் 3 ஆயிரத்து 294.42 ஏக்கர் நிலம் படையினர் வசம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில்

இராணுவத்தினர் வசம் 68.46 ஏக்கர் தனியார் காணிகளும், 5 ஆயிரத்து 864.07 ஏக்கர் அரச காணிகளும் உள்ளன.

கடற்படையினர் வசம் எந்த நிலங்களும் கிடையாது.

விமானப் படையினர் வசம் தனியார் காணிகள் கிடையாது. 1571.60 ஏக்கர் அரச காணி உள்ளது.

இதன்படி வவுனியா மாவட்டத்தில், 68.46 ஏக்கர் தனியார் காணிகளும், 7 ஆயிரத்து 435.67 ஏக்கர் அரச காணிகளுமாக மொத்தம் 7 ஆயிரத்து 504.13 ஏக்கர் நிலம் படையினர் வசம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் 21 ஆயிரத்து 349. 69 ஏக்கர் அரச காணிகளும், 5 ஆயிரத்து 880.78 ஏக்கர் தனியார் காணிகளுமாக மொத்தம் 27 ஆயிரத்து 230 ஏக்கர் நிலம் படைவசமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் வனவளத் திணைக்களத்தின் காணிகளும், வன ஜீவராசித் திணைக்களத்தின் காணிகளுமே படையினர் வசம் அதிகமுள்ளன.

அவை குறித்து இதில் தெரிவிக்கப்படாத நிலையில் அவ்வாறான நிலங்களே 37 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே வட மாகாணத்தில் முப்படையினர் வசமுள்ள காணிகள் மொத்தமாக சுமார் 60 ஆயிரம் ஏக்கர் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வீடு காணி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments