கர்ப்பம் தரித்த பெண்கள் பின்பற்ற வேண்டிய உணவு பட்டியல் என்ன தெரியுமா?

Report Print Kavitha in கர்ப்பம்

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் ஆரோக்கியமான உணவுகளை தேர்தெடுத்து உண்ணுவது அவசியமானது ஆகும்.

அந்தவகையில் கர்ப்பம் தரித்த பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுப்பட்டியல் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

  • கர்ப்பிணி பெண்கள் வழக்கத்தை விட மாறாக மூன்று வேளைக்கு பதில் ஆறு வேளை உணவு உட்கொள்ள வேண்டும்.
  • சைவ உணவுகளை பொறுத்தவரை தானியங்கள், பருப்புகள், பயிறுவகைகள், காய்கறி, பழங்கள், கீரைகள் உள்ளிட்டவற்றை கட்டாயம் உட்கொள்ள வேண்டும்.
  • பால், தயிர், வெண்ணெய், நெய், மோர், பாலாடைக்கட்டி என புரதம் நிறைந்த பால் சார்ந்த பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • முந்திரி, காய்ந்த திராட்சை, வேர்க்கடலை, நெல்லிக்காய், அத்திப்பழம் போன்ற உலர் பழங்கள் மற்றும் கோட்டை வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • அசைவ உணவுகளில் முட்டை, மீன், ஆடு, கோழி இறைச்சி, ஆட்டு ஈரல் போன்றவற்றை சாப்பிடலாம்.
  • குழந்தையின் வளர்ச்சிக்கு போலிக் அமிலம் மற்றும் இரும்பு சத்துக்கள் மிகமிக அவசியம் எனவே அத்தகைளய சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
  • இரும்பு சத்து நிறைந்த முருங்கை கீரை, பேரிச்சம் பழம், தர்பூசணி, உலர்ந்த திராட்சைகள், காய்ந்த சுண்டைக்காய், வெல்லம், பனங்கற்கண்டு, பாதாம், ஆட்டு ஈரல் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • கர்ப்பம் தரித்த நேரங்களில் அதிகப்படியான தண்ணீர் குடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்