கர்ப்பிணி பெண்கள் பூசணிக்காய் சாப்பிடலாமா?

Report Print Kavitha in கர்ப்பம்

பூசணிக்காய் ஊட்டச்சத்திற்கு ஒரு நல்ல ஆதாரமாக விளங்குகிறது. இது உடலுக்கு பலவகையில் நன்மை தருகின்றது.

இதில் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், இரும்பு, கால்சியம், நியாசின் மற்றும் பாஸ்பரஸ் அடங்கியுள்ளதால் குழந்தை மற்றும் தாய்க்குத் தேவையான அனைத்து ஆரோக்கிய நன்மைகளையும் கொடுக்கிறது.

இருப்பினும் பூசணிக்காயை கர்ப்ப காலத்தில் சாப்பிடுவதால் சில நன்மைகளும் உள்ளன அதே நேரத்தில் சில பக்க விளைவுகளும் உள்ளன.

அந்தவகையில் கர்ப்பக்காலத்தில் பூசணிக்காய் சாப்பிடலாமா? கூடாதா என இங்கு பார்ப்போம்.

கர்ப்பக்காலத்தில் பூசணிக்காய் சாப்பிடலாமா?
 • கர்ப்ப காலத்தில் பூசணிக்காய் மற்றும் அதன் விதைகளை உண்பதால் வயிற்றில் ஏற்படும் பிடிப்புகளைக் குறைக்க உதவுகிறது. இதனை நீங்கள் வேக வைத்தோ, வறுத்தோ அல்லது தனியாக சமைத்தோ உண்ணலாம்.
 • கர்ப்ப காலத்தில் சாப்பிடும் பூசணிக்காய் குடலில் இருக்கும் புழுக்களை அகற்றி வயிற்றினை சுத்தம் செய்து அரிக்கும் தோலழற்சி போன்றவற்றைக் குறைக்கிறது. மேலும் கர்ப்ப காலத்தில் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளைச் சரி செய்கிறது.
 • கர்ப்ப காலத்தில் ஏற்பாடு இரத்த சர்க்கரையின் அளவை குறைப்பதற்கு பூசணிக்காய் உதவுகிறது. அத்துடன் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது.
 • பூசணிக்காயில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் கர்ப்பிணிப் பெண்களின் செரிமான அமைப்பு உறுதி செய்யப்பட்டு குடல் இயக்கங்கள் சரியாக வேலை செய்வதினால் மலச்சிக்கல் தடுக்கப்படுகிறது
பக்கவிளைவுகள்
 • பூசணிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் சில பக்க விளைவுகள் உள்ளன. எனவே அவை என்ன என்பதை தெரிந்து கொண்டு பூசணிக்காயை சாப்பிடுங்கள்.
 • பூசணிக்காயில் உள்ள விதைகள் அதிக அளவில் ஹார்மோன்களை வெளியிடுவதால் அவை கர்ப்பிணி பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படும் பண்பினை கொண்டுள்ளது.
 • அதிக அளவில் பூசணிக்காயை உட்கொள்ளும் போது தலைவலி, வயிற்று வலி, இரைப்பை தொல்லை, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் ஏற்பட வழிகள் உள்ளன.
 • பூசணிக்காயில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை போல பூசணிக்காய் விதைகளும் சில ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளன.
பூசணி விதைகளை கர்ப்ப காலத்தில் சாப்பிடலாமா?
 • பூசணி விதைகளைக் கர்ப்ப காலத்தில் உட்கொள்ளுவதால் உங்கள் உடலுக்குத் தேவையான பாதியளவு மெக்னீசியத்தினை தருகிறது. இந்த மெக்னீசியமானது உங்கள் இதயத் துடிப்பின் அளவினை சீராக வைத்து இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
 • பூசணி விதைகளில் துத்தநாகம் அதிகமாக உள்ளதால் கர்ப்பிணிப் பெண்களின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க உதவுகிறது.
 • பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்கள் நீரழிவு நோய்களினால் பாதிக்கப்படுவது இயல்பு. பூசணி விதைகளில் இன்சுலின் கட்டுப்படுத்தும் தன்மை இருப்பதினால் நீரிழிவு நோயின் அளவினை குறைத்து கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
 • தூங்கச் செல்லும் சில மணி நேரங்களுக்கு முன்பு பூசணி விதைகளை உட்கொள்ளுவதால் அதில் இருக்கும் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உங்கள் உடலில் இருக்கும்தூக்க ஹார்மோன்களான மெலடோனின் ஆக மாறி தூக்கத்தினை ஏற்படுத்துகிறது. இதனால் நீங்கள் இரவு முழுவதும் நிம்மதியான துக்கத்தினை பெற முடியும்.
 • மாதவிடாய் நின்றதினால் சிலருக்கு இரத்த அழுத்த அளவு, தலைவலி மற்றும் மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும் இவற்றை எல்லாம் சரி செய்ய பூசணிக்காய் விதைகள் உதவும்.
 • பூசணிக்காய் விதைகளில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால் கருவின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்