டெஸ்ட் டியூப் குழந்தை என்பது என்ன?

Report Print Fathima Fathima in கர்ப்பம்

சமீபத்தில் நடிகை ரேவதி தான் வளர்த்து வரும் குழந்தை மஹி தன்னுடைய குழந்தை தான் என்றும், 5 ஆண்டுகளுக்கு முன் டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெற்றெடுத்ததாகவும் அறிவித்தார்.

இந்த முறையில் குழந்தை பெற்றெடுப்பது எப்படி என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

IVF அல்லது ICSI எனப்படும் சிகிச்சை முறைகள் இனப்பெருக்க உயர் சிகிச்சை முறைகளாகும்.

கருவும் ஆணின் விந்தணுவும் உடம்பிற்கு வெளியில் கருத்தரிக்கச் செய்து உடம்பினுள் வளர்வதற்காக பெண்ணின் கருப்பையில் இடப்படுகின்றன.

கருவுறுதல் வெளியில் நடைபெறுவதால் அவை டெஸ்ட் டியூப் குழந்தைகள் என அழைக்கப்படுகின்றன.

இதற்காக பல கரு முட்டைகள் பெறப்படும், பின்னர் கணவனின் விந்தணு பெறப்பட்டு துடிப்பாக உள்ள அணுக்கள் தெரிவு செய்யப்பட்டு, கருவுறும் வழிமுறையில் இவை ஒன்றிணைக்கப்பட்டு பெண்ணின் கருப்பைக்குள் இடப்படுகின்றன.

ஆனால் இந்த வகையில் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய நோய்களின் மூலக்காரணத்தையும், பாலினத்தையும் தெரிவு செய்ய முடியுமே தவிர, மரபணு மாற்றம் செய்து குழந்தையை பெற முடியாது.

மற்ற குழந்தைகளை போன்றே இவர்களும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...