முதலையின் கழிவை பெண்களின் பிறப்புறுப்பில் வைத்து கருக்கலைப்பு! அதிர்ச்சி அளிக்கும் மூடநம்பிக்கைகள்

Report Print Deepthi Deepthi in கர்ப்பம்
76Shares
76Shares
ibctamil.com

உலகில் கருக்கலைப்பு என்பது பதிணைந்தாம் நூற்றாண்டிலிருந்தே தொடர்ந்து வருகிறது.

இன்றைய காலத்தில் கருக்கலைப்பு செய்யக்கூடாது என்று சட்டங்கள் உள்ளது, ஆனால் அன்றைய காலத்தில் சட்டங்கள் ஏதும் இல்லாத காரணத்தால், கருக்கலைப்பு மிகவும் சாதரணமாக நடைபெற்றது, அதுமட்டுமின்றி பண்டைய காலத்தில் மூடநம்பிக்கைகளில் மூழ்கி இருந்த மக்கள், கருக்கலைப்புக்காக மிகவும் மோசமான முறையை கையாண்டுள்ளார்கள்.

கருக்கலைப்பு முதன்முதலாக எகிப்தியர்கள் செய்ததாக வரலாறு கூறுகிறது.

எகிப்தியர்கள் கையாண்ட கருக்கலைப்பில் முதலையின் கழிவுகளை சேகரித்து உருண்டையாக பிடித்து காயவைக்கிறார்கள். அதனை கர்ப்பமடைந்திருக்கும் பெண்ணின் பிறப்புறுப்பில் வைத்து விடுகிறார்கள்.

கழிவில் இருக்கும் சில சத்துக்கள் மூலமாக கரு கலைந்துவிடும், அதோடு இவை கரு உருவாகாமலும் தடுக்கும் என்றும் சொல்லப்படுகிறது. கர்ப்பமாவதற்கு முன்னதாகவே பெண்கள் இதை பயன்படுத்த ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்.

ஹிப்போக்ரேட்ஸ் என்ற கிரேக்க மருத்துவர் கருக்கலைப்பிற்கு எதிராக இருந்தாலும் இவர் கருக்கலைப்பிற்காக சொன்ன ஒரு வழி, பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்திருக்கிறது.

நன்றாக குதிக்க வேண்டும். ஒவ்வொரு முறை குதிக்கும் போதும் உங்களுடைய கால்கள் மடக்கி பின்னால் பட வேண்டும். இப்படி செய்யும் போது கர்ப்பப்பை பலவீனமடைந்து கரு வெளியேறும்.

ஆனால், கரு நன்றாக வளர்ந்தபின்னர் இந்த முறையை பின்பற்றினால் அது பலனளிக்காது.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்