கர்ப்பக் காலத்தில் இதை செய்யுங்கள்: குழந்தை புத்திசாலியாக இருக்குமாம்

Report Print Printha in கர்ப்பம்
530Shares

கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாகவும், அறிவாகவும் பிறப்பதற்கு கர்ப்பக் காலத்தில் சில விடயங்களை பின்பற்ற வேண்டும்.

கர்ப்பக் காலத்தில் பின்பற்ற வேண்டியவை?
  • வயிற்றில் குழந்தை இருக்கும் போது மனதை வருடும் மெல்லிய இசைகள் கேட்கலாம். ஆனால் அதிக சப்தம் மற்றும் அதிர வைக்கும் பாடல்களை கேட்க கூடாது.
  • தினமும் சிறிது நேரம் ஒரு நல்ல புத்தகத்தை படிக்க வேண்டும். இதனால் குழந்தைக்கும் அறிவை அதிகரிக்க முடியும்.
  • கர்ப்பகாலத்தில் பாட்டு பாடுவதன் மூலம் மனதை அமைதி படுத்த முடியும். அதோடு மட்டுமில்லாமல் குழந்தையின் மூளையை அறிவுப்பூர்வமானதாக மாற்றும்.
  • கர்ப்ப காலத்தில் நமது காதுகளில் விழும் வார்த்தைகளும், நமது மனதில் தோன்றும் எண்ணங்களும், அடுத்தவர்களிடம் பேசும் வார்த்தைகளும் நல்லதாக மட்டுமே இருக்க வேண்டும்.
  • கர்ப்பிணி பெண்கள் வயிற்றினை மசாஜ் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் அதனால் குழந்தையின் தொடு உணர்வு அதிகரிக்கும்.
  • கருவில் குழந்தை இருக்கும் போது, பெண்கள் எப்போது சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இல்லையெனில் குழந்தையை பாதிக்கும்.
  • கர்ப்பிணி பெண்கள் கடற்கரை, பசுமையான இடங்கள், அழகான உணவகங்கள் என்று இயற்கை நிறைந்த இடங்களுக்கு அடிக்கடி சென்று வர வேண்டும். இதனால் கருவில் உள்ள குழந்தையின் இரண்டாம் பருவ காலத்தில் பல சூழ்நிலை மாற்றங்களை உணர முடியும்.
  • குழந்தை கருவில் இருக்கும் போது தாய் பசியுடன் இருக்காமல், நிறைய பழங்கள், பச்சை காய்கறிகள், கீரைகள் என்று சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்