தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் கவனத்திற்கு

Report Print Printha in கர்ப்பம்

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் நல்ல வளர்ச்சியுடனும், புத்தி கூர்மையுடனும் வளர்கிறது என ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது.

தாய்ப்பால் கொடுக்கும் அம்மாவுக்கு ஜலதோஷம், ஜுரம் போன்றவை இருந்தும், அவர்கள் அதற்காக மருந்து சாப்பிட்டு வந்தாலும் தாய்ப்பால் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

மேலும் மருந்துகள் உட்கொள்ளும் போது தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி சாப்பிட வேண்டும்.

குழந்தைகளுக்கு தொடர்ந்து தாய்மார்கள் பால் கொடுக்க தவறினால், தாயின் மார்பகத்தில் பால்கட்டி ஏற்பட்டு அந்த இடத்தில் சீழ் போன்று வரும் அபாயம் உள்ளது.

இதனால் மார்பகத்தில் அறுவைச் சிகிச்சை செய்யும் நிலைமை உண்டாகலாம்.

சிறிதான பால்கட்டிகள் ஏற்பட்டால் சுடுநீர் வைத்து ஒத்தடம் கொடுத்து கட்டிக் கொண்ட பாலை பீய்ச்சி எடுக்க வேண்டும்.

தாய்மார்கள் குழந்தைகளுக்கு சரியான இடைவெளிகள் விட்டு சீரான முறையில் பால் கொடுக்க வேண்டும். இதனால் தாயின் மார்பகத்தில் உண்டாகும் பால்கட்டிகளை தடுக்கலாம்.

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் பால் குடிக்க சில நேரங்களில் திணறும்.

இதனால் தாய்மார்களின் பால் கொடுக்கும் நிப்புள்களில் புண்கள் வர வாய்ப்புகள் உள்ளது. இதற்கு மருத்துவரிடன் சென்று உடனடியாக பார்க்க வேண்டும்.

மேலும் தாய்மார்களின் நிப்புள்களில் புண்கள் ஏற்பட்டால் மற்றொரு மார்பகத்திலிருந்து குழந்தைக்கு பால் கொடுத்து வர வேண்டும்.

புண்ணாகும் நிப்புள்களில் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகு குழந்தைக்கு பால் கொடுக்காதை சமயங்களில் வேக்சலின் போன்ற க்ரீமைத் தடவி மார்பகத்தை தண்ணீர் மற்றும் மைல்டான சோப்பு கொண்டு சுத்தம் செய்த பிறகு குழந்தைக்குப் பால் கொடுக்க வேண்டும்.

Expressed Milk என்பது குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலைத் தாயிடமிருந்து வேறு வழிகளில் எடுத்துச் சேகரித்துக் கொடுப்பது ஆகும்.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments