கர்ப்பிணிகள் காஸ்மெடிக்ஸ் உபயோகிப்பது ஆபத்து

Report Print Tamilini in கர்ப்பம்
400Shares

கர்ப்ப காலத்தில் பெண்கள் உபயோகப்படுத்தும் சோப்பினால் பக்க விளைவுகள் உண்டாகி, எடை குறைந்த குழந்தைகள் பிறக்கக் கூடும்.

கர்ப்பிணிகள் காஸ்மெடிக்ஸ் உபயோகிப்பது ஆபத்தானது.

கர்ப்ப காலத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

காரணம் உங்கள் வயிற்றில் இருக்கும் சிசுவினையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய சூழ் நிலையில் உள்ளீர்கள்.

உங்கள் தோலிலுள்ள எண்ணற்ற துவாரங்களின் மூலம் உங்கள் தோலும் சுவாசிக்கின்றது. ஆகவே நீங்கள் போடும் மேக்கப், பயன்படுத்தும் சோப்புகள், உபயோகபடுத்தும் லோஷன்கள் ஆகியவை ஆழமாக ஊடுருவும்.

இப்படியிருக்க அவைகளை கர்ப்ப காலத்தில் எச்சரிக்கையாய் கையாளுவது அவசியம். கர்ப்ப காலத்தில் பெண்கள் உபயோகப்படுத்தும் சோப்பினால் பக்க விளைவுகள் உண்டாகி, எடை குறைந்த குழந்தைகள் பிறக்கக் கூடும் என சமீப ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

ட்ரைக்ளோகார்பன் என்ற கெமிக்கலும் சில வகை சோப்புகளில் உள்ளது.

அவைகளும் பக்கவிளைவை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.

சோப்பினை பயன்படுத்தும்போது அதில் சேர்க்கப்பட்ட பொருட்களை பார்த்து பின் வாங்குவது நல்லது.

அல்லது முடிந்த வரை கெமிக்கல் சோப் போடுவது தவிர்த்து, இயற்கையான கடலை மாவு, பயித்தம் மாவு பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments