கர்ப்ப காலத்தில் அதிகளவான சிக்கல்களை கொடுக்கும் ஆண் குழந்தைகள்: ஆய்வில் தகவல்

Report Print Givitharan Givitharan in கர்ப்பம்
கர்ப்ப காலத்தில் அதிகளவான சிக்கல்களை கொடுக்கும் ஆண் குழந்தைகள்: ஆய்வில் தகவல்
516Shares

பொதுவாக ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகளிலும் பார்க்க குழந்தை பிறக்கும் தருவாயில் அதிக அச்சுறுத்தல் தருவதாக புதிய ஆய்வுகள் சொல்கின்றன.

இவ் ஆய்வு 'PLOS ONE' என்னும் ஆய்வுப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இவ் ஆராய்ச்சி 30 ஆண்டுகாலமாக 574 000 பிறப்புக்களில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்படி பாலின வேறுபாடுகள் பிறப்பு விளைவுகளிலும் வேறுபாட்டை காட்டுவது தெரியவந்துள்ளது.இங்கு ஆய்வாளர்கள் குழந்தைகளின் பாலின வேறுபாட்டிற்கும், ஏற்படும் உயர் குருதியமுக்கம், கர்ப்பகால நீரிழிவு நோய் போன்ற தீங்கான விளைவுகளுக்குமிடையிலான தொடர்பை ஆராய்ந்திருந்தனர்.

இதன் போது ஆண்கள் அதிகளவில் தன்னிச்சையாகவே குறைப்பிரசவமாக பிறப்பது அவதானிக்கப்பட்டது.

இதில் 27 வீதமான ஆண்கள் கர்ப்பத்தின் 20 - 24 வார காலத்தில் குறைப்பிரசவம் நடப்பதற்கான சாத்தியங்களும், 24 வீதமானோர் 30 - 33 வார காலத்தில் பிறப்பதற்கான சாத்தியங்களும், 17 வீதமானோர் 34 - 36 வார காலத்தில் பிறப்பதற்கான சாத்தியங்களும் இருந்தமை அவதானிக்கப்பட்டது.

ஆனாலும் இங்கு அவதானிக்கப்பட்ட முக்கிய முடிவு, குழந்தைகளின் பால் ஆனது நேரடியாக கர்ப்ப விளைவுகளுடன் சம்மந்தப்பட்டிருக்கிறது என்பதாகும்.

அதாவது ஆண்களை சுமக்கும் தாயானவள் 4 வீதம் வரையில் கர்ப்பகால நீரிழிவு நோயினாலும், 7.5 வீதம் முன் சினைப்பருவ வலிகளாலும் அவதிப்படுகிறாள்.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments