ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி சென்னை விஜயம்

Report Print Amirah in அரசியல்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி டெல்லியில் இருந்து சென்னைக்கு கிளம்பியுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணிக்கு காலமானார்.

இதையடுத்து அவரது உடல் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டது. அதன் பிறகு அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் இன்று காலை 9 மணிக்கு சென்னைக்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும் டெல்லியில் கடும் பனிமூட்டமாக இருப்பதால் சாலை, விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் மோடி கிளம்புவதில் தாமதம் ஏற்பட்டது. மோடி காலை 11.30 மணிக்கு சென்னையை வந்தடைவதாகவும், நண்பகல் 12 மணிக்கு ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்தோடு ஜெயலலிதாவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

நடிகர் விஜய் அஞ்சலி நடிகர் பிரபு, விக்ரம் பிரபு அஞ்சலி செலுத்தியுள்ளனர். அத்தோடு பல பிரபரங்கள் சமூக வலைதலங்கள் மூலமும் தமது இரங்கலை வெளியிடுகின்றனர்.

மேலும் அரசியல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments