ஓட்டுக்கு நீங்கள் வருவீர்கள்! காவேரி என்றால் ரஜினி வரணுமா? வெக்கமா இல்லையா?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஓட்டுக் கேட்க நீங்க வருவீங்க... பிரச்சினையைத் தீர்க்க ரஜினிகாந்த் வரணுமா? ஏன்டா வெக்கமா இல்லையா என இயக்குநர் அமீர் ஆவேசமாக பேசியுள்ளார்.

காவிரிப் பிரச்சினை குறித்து நாம் தமிழர் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர்,

"காவிரிப் பிரச்சினையில் நான் தலையிட மாட்டேன். உச்ச நீதிமன்றம் தலையிட்டிருப்பதால் நான் தலையிடக் கூடாது என்கிறார்.

எங்களின் ஒவ்வொரு பிரச்சினைக்கும் உச்ச நீதிமன்றம் தான் தலையிட வேண்டும் என்றால்... பிரதமர் எதற்கு? உச்ச நீதிமன்ற நீதிபதியே போதுமே.

இத்தனை லட்சம் கோடிகள் செலவழித்து எதற்கு தேர்தல்? மத்தியில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த தமிழிசை சௌந்தர்ராஜன் ஒரு பேட்டி கொடுக்கிறார்.

அதில் 'நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இரு மாநிலத்துக்குமான உறவைச் சேர்த்து வைக்க வேண்டுமாம்.. பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமாம்'. ஓட்டுக் கேட்க நீங்க வருவீங்க. பிரச்சினையைத் தீர்க்க ரஜினிகாந்த் வரணுமா?

ஏன்டா வெக்கமா இல்ல... எப்படி வெட்கமே இல்லாம, மான வெட்கம் சூடு சுரணை இல்லாம நீங்கள்லாம் டிவி முன்னாடி நின்னு பேட்டி கொடுக்கறீங்க?

ஏன்டா, ரஜினிகாந்தா வந்து என்கிட்ட ஓட்டுக் கேட்டாரு? ரஜினிகாந்தா மேக் இன் இந்தியான்னு என்கிட்ட சொன்னாரு? ரஜினிகாந்தா க்ளீன் இந்தியா சொன்னாரு? சொன்னவங்கெல்லாம் ஓடிப் போயிட்டாங்க...," என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

மேலும் அரசியல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments