காஷ்மீரில் இடம்பெறும் வன்முறைகளுக்கு பாக்கிஸ்தானே காரணம்!

Report Print Ajith Ajith in அரசியல்
காஷ்மீரில் இடம்பெறும் வன்முறைகளுக்கு பாக்கிஸ்தானே காரணம்!
46Shares

காஷ்மீரில் புர்ஹான் வானி கொல்லப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளுக்கு பாகிஸ்தானே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்திய மத்திய நிதியமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான அருண் ஜேட்லி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மாநிலங்கள் அவையில் இன்று உரையாற்றி அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்,

பா.ஜ க - மக்கள் ஜனநாயகக் கட்சி ஆட்சியேற்றதன் காரணமாகவே காஷ்மீரில் வன்முறைகள் வெடிக்கிறது என்று நினைப்பது அரசியல் தவிர வேறில்லை.

இதனை விடுத்து, வேறுபாடுகளை மறந்து நாட்டுக்காக ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

காஷ்மீரில் இடம்பெறும் கலவரங்களுக்கு கூட்டணி ஆட்சியோ, அல்லது தொலைக்காட்சி விவாதங்களோ காரணம் அல்ல.

காஷ்மீர் இந்திய நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்ற கருத்துடன் பாகிஸ்தான் ஒத்துப்போகாமையே கலவரங்களுக்கு முக்கியக் காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசியல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments