திமுக கூட்டணியில் தொல்.திருமாவளவன்?

Report Print Deepthi Deepthi in அரசியல்
திமுக கூட்டணியில் தொல்.திருமாவளவன்?
527Shares

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணியுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சி இணை வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் ம.தி.மு.க கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் இணைந்து உருவாக்கிய மக்கள் நலக்கூட்டணியில் தே.மு.தி.க.வும், த.மா.கா.வும் தேர்தல் உடன்பாடு வைத்துக் கொண்டன.

இப்போது த.மா.கா. விலகிவிட்டது. விஜயகாந்த் இதுவரை அதிகாரப் பூர்வமாக எதுவும் சொல்லவில்லை.

சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை மது, ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட மாநிலம் தழுவிய பிரச்சினைகளை முன்னிறுத்தி மக்கள் நல கூட்டணி தேர்தலை சந்தித்தது.

பாராளுமன்ற தேர்தல் அணுகுமுறை வேறு விதமானது. நாடு தழுவிய அளவில் மதசார்பற்ற அணி வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். அதற்கேற்ப கூட்டணி அமையும் என்றார்.

திருமாவளவன் மதசார் பற்ற அணி என்று குறிப்பிட்டது தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியைத்தான் என்பது தெளிவாகிறது. அகில இந்திய அளவில் பா.ஜனதாவுக்கு எதிரான கட்சி காங்கிரஸ்.

பா.ஜனதா ஆட்சிக்கு வரக்கூடாது என்ற கொள்கையுடன் இருக்கும் திருமாவளவன் காங்கிரஸ் அணியில்தான் சேருவார். காங்கிரஸ்-தி.மு.க.வுடன் கூட்டணியில் இருப்பதால் திருமாவளவனும் அந்த கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இடதுசாரி கட்சிகளும் மதசார்பற்ற கூட்டணியைதான் விரும்பும். அந்த வகையில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகளும் இடம் பெறும்.

மேலும் அரசியல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments