நடிகை ரம்யாவுக்கு முட்டுக்கட்டை போடும் தலைவர்கள்!

Report Print Deepthi Deepthi in அரசியல்
நடிகை ரம்யாவுக்கு முட்டுக்கட்டை போடும் தலைவர்கள்!
363Shares

கர்நாடாக சட்ட மேலவையில் காலியாகவிருக்கும் 3 நியமன உறுப்பினர்கள் இடத்தினை நிரப்பினால் காங்கிரஸ் உறுப்பினர்கள் எண்ணிக்கை 33ஆக உயரும்.

இதை கருத்தில் கொண்டு காலியாகவுள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்பதில் முதல்வர் சித்தராமையா ஆர்வமாகவுள்ளார்.

தற்போது நடந்து வரும் சட்டபேரவை மழைக்கால கூட்டத்தொடர் முடிவதற்குள் மூன்று நியமன உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதிலும் முதல்வர் உறுதியாகவுள்ளார்,

இதில் பிரதிநித்துவம் இல்லாத சாதியினருக்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது என்ற யோசனையும் சித்தராமையாவுக்கு உள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநில தலைவரும், உள்துறை அமைச்சருமான ஜி.பரமேஸ்வருடன் இரண்டு முறை முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளார்

இதில் பிரதிநித்துவம் இல்லாத சாதியினருக்கு முன்னுரிமை கொடுப்பது தொடர்பாக கட்சியின் மாநில தலைவரும், உள்துறை அமைச்சருமான ஜி.பரமேஸ்வருடன் இரண்டு முறை முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தியுள்ளார்.

மூன்று இடங்களுக்கு முற்போக்கு இலக்கிய எழுத்தாளர் பரகூரு இராமசந்திரப்பா, இலக்கிய எழுத்தாளர் மருளசித்தப்பா, நடிகையும், முன்னாள் எம்.பியுமான ரம்யா மற்றும் கர்நாடக மாநில விஸ்வகர்ம மகாசபை தலைவர் கே.பி.நஞ்சுண்டி ஆகியோர் இடையில் போட்டி நிலவுகிறது.

நடிகை ரம்யாவுக்கு வாய்ப்பு கொடுக்கும்படி காங்கிரஸ் மேலிடம் வாய்மொழியாக உத்தரவிட்டும், அவரை நியமிக்க மாநில காங்கிரசில் உள்ள சில தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், எனவே 3 மேலவை நியமன உறுப்பினர்களை தேர்வு செய்யும் விடயத்தில் காலதாமதமாகி வருவதாக அரசு வட்டாரம் மூலம் தெரியவருகிறது.

மேலும் அரசியல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments