அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த ரோச்சஸ்டன் நிறுவனத்தின் சார்பில், திமுக தலைவர் கருணாநிதிக்கு''தனிச்சிறப்பு மிக்க அரசியல் தலைவர்'' விருது வழங்கப்பட்டுள்ளது.
ரோச்சஸ்ன் நிறுவனத் தலைவர் காஜா மொய்தின் மற்றும் நிர்வாக இயக்குனர் ஹாசிம் ஆகியோர் இன்று கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நேரில் சந்தித்து இவ்விருதை வழங்கியுள்ளனர்.
ஆண்டுதோறும் உலகின் சிறந்த சிந்தனையாளர்களுக்கும், மக்கள் தலைவர்களுக்கும் இந்த விருதினை வழங்கி வரும் ரோச்சஸ்டன் நிறுவனம் , இந்த ஆண்டுக்கான விருதை கலைஞருக்கு வழங்கியுள்ளது.
'' ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் உள்ளமக்களுக்கு ஊக்கம் அளிக்க கூடியவகையில் போற்றுதலுக்குரிய தலைவராகவும், அரசியல் சிந்தனையாளராகவும், எழுத்தாளராகவும், மொழி அறிஞராகவும், பன்முக ஆற்றலோடு செயல்பட்டு வரும் தங்களுக்கு இந்தவிருதினை வழங்குவதில் பெருமை கொள்கிறோம் என்று அந்த விருதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.