இலங்கை தமிழர் வாழும் பகுதிகளில் ராணுவம் எதற்காக?

Report Print Basu in அரசியல்
இலங்கை தமிழர் வாழும் பகுதிகளில் ராணுவம் எதற்காக?

இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் ராணுவத்தை திரும்ப வேண்டும் என இலங்கை அதிபர் சிறிசேனவை திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக்கட்டப் போருக்குப் பின், அங்கே தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ராணுவம் அதிக அளவில் குவிக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்வுரிமைகளுக்கு அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து வருகிறது.

வெற்றிபெறுவதற்கு முன் சிறிசேனா அளித்த உறுதிமொழிகளை தமிழ் மக்கள் அப்படியே நம்பினார்கள், அவைகள் எல்லாம் நிச்சயம் நிறைவேறும் என்றும் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், பாரம்பரியமாக தமிழர்கள் வாழும் பகுதிகளில் ராணுவம்,பொது அமைதியினை நிலைநாட்டிப் பேணுவதற்கான கடமைகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்திருந்தார்.

மேலும்,இலங்கையின் முக்கிய ராணுவ முகாமானசாலவ ராணுவ முகாமின் ஆயுதக்கிடங்கு தீப்பிடித்து பெரிய சேதம் ஏற்பட்டதைத்தொடர்ந்து, தமிழர் வாழும் பகுதிகளில் இருந்து ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் என அனைத்து தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது.

ஆனால், புத்தமதத் தலைமைப்பீடத்திற்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அஸ்கிரி மாநாயக்கதேரர் ராணுவ முகாம்களை அகற்ற கூடாது என ஆலோசனை கூறியதாக இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் மகிந்தசமரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு, இராணுவம் அங்கே தொடர்ந்து இருக்கவேண்டுமா? வேண்டாமா? என்பதை புத்த மதத்தலைவரைக் கலந்து கொண்டா ஒரு அமைச்சர் அறிவிப்பது? அது ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நியாயமான செயலாகுமா?

இலங்கை அரசு, ஈழத்தமிழர்களிடம் பாகுபாடு காட்டாமல் உள்ளது என்பதை நிரூபிக்க முதற் கட்டமாக தமிழர் பகுதிகளிலே இருந்து உடனடியாக ராணுவத்தை முற்றாக விலக்கிக் கொள்ளவேண்டும். இதற்கான நடவடிக்கைகளை சிறிசேனா அரசு நம்பத் தக்க வகையில் நேர்மையோடு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அரசியல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments