வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையை தவிர்க்க காரணம் என்ன?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் எதுவும் இந்த அரசாங்கத்திடம் இல்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே சபையில் தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் எந்த சலுகையையும் வழங்குவதில்லை. அவர்களை ஊக்குவிக்கும் எந்த வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை. அதனால்தான் முதலீட்டாளர்கள் வருவதில்லை.

இந்த அரசாங்கத்தின் பிரதான இயக்குநராக மலிக் சமரவிக்ரமவே செயற்படுகின்றார். அவரது அமைச்சின் கீழே சர்வதேச வர்த்தகம் இருக்கின்றது.

எனினும் அவருக்கு இருக்கும் வெளிவேலைகள் காரணமாக சர்வதேச வரத்தக அமைச்சின் வேலைத்திட்டங்களை மேற்கொள்ள முடியாது. அதனால் பொருத்தமான ஒருவருக்கு இந்த அமைச்சை கையளித்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் அரசியல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்